பக்கம்:தந்தையும் மகளும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

139

செய்யும். மற்ற எண்ணெய்களை ஊற்றினாலும் வெளிச்சம் குறைவாகவே இருக்கும்.

ஆனால் மண்ணெண்ணெய் அதிகச் சீக்கிரமாக ஆவியாக மாறக்கூடியது. அதனால்தான் அதன் வெளிச்சம் பிரகாசமாயிருக்கிறது. அத்துடன் அந்த விளக்குகளில் காற்று அளவாக வரும்படி அடியில் சிறு துவாரங்கள் இருப்பதாலும், சிமினி இருப்பதாலும், திரியை அளவாக எரியும்படி நாம் அதை ஏற்றவும் இறக்கவும் கூடியதாக இருப்பதாலும் அந்த விளக்கைச் சரியாகக் கவனித்து எத்ரிதால் புகை உண்டாகாது, நாறாது.

அதனால்தான் மற்ற எண்ணெய் விளக்குகளை நீக்கி விட்டு மண்ணெண்ணெய் விளக்குகளை உபயோகிக்கிறோம். அந்த விளக்கை உபயோகிக்க ஆரம்பித்தது 1860-ம் ஆண்டிலாகும். இப்பொழுது 125 வருஷங்கள் ஆகின்றன. அந்த விளக்கு மறைந்து மின்சார விளக்கு வந்திருக்கிறது. அது அதிகப் பிரகாசமாகவும் இருக்கிறது. நாற்றமென்பது கிடையவே கிடையாது.

140 அப்பா! தண்ணீரைக்கொண்டு நெருப்பு பற்றவைக்க முடியுமா?

அம்மா! நாம் தண்ணீரைக்கொண்டு நெருப்பை அணைக்கிறோமேயன்றி நெருப்பைப் பற்றவைப்பதில்லை. விறகு சிறிது ஈரமாயிருந்தால்கூட அதில் நெருப்புப் பற்ற வைத்த முடிவதில்லை. அப்படியிருக்க நீரைக்கொண்டு நெருப்புப் பற்றவைப்பது எப்படி?

அம்மா! தண்ணீரைவிட நீராவி அதிக உஷ்ணமாயிருக்கும். அதைக் கொண்டுகூட நெருப்புப் பற்றவைக்க முடியாது. ஒரு குச்சியை நீராவியில் பிடித்தால் அது எரியுமா? எரியாது.