பக்கம்:தந்தையும் மகளும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

தந்தையும்

மாறுவதில்லை. அது தேள் செழித்து வளர்வதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது. அவ்வளவுதான்.

அம்மா! அரிசியைப் பானையில் போட்டு நீண்டநாள் மூடி வைத்திருந்தால் அதில் புழு உண்டாகும், நீ பார்த்திருப்பாய் அதையும் இப்படித்தான் சொல்லுவார்கள். அதுவும் தவறு. புழுவின் முட்டைகள் கண்ணுக்குத் தெரியாதபடி காற்றில் பறந்து கொண்டிருக்கின்றன. அவை அரிசியில் உட்கார்கின்றன. அரிசியை மூடாமல் காற்றுப் படும்படி வைத்திருந்தால் அந்தப் புழுக்கள் இறந்து போகும். மூடி வைத்தால் அவை வெடித்துப் புழுக்களாக வருவதற்கான வசதி உண்டாய் விடுகிறது. பழங்கள் அழுகி அவற்றில் புழுக்கள் உண்டாவதும் அதுபோலவேதான்.

அம்மா! உயிருள்ளவை எல்லாம் உயிருள்ளவைகளிலிருந்து தான் உண்டாகும். உயிரில்லாத பொருள்களிலிருந்து உண்டாகா. இந்த உண்மையை நூறு ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் தேசத்திலிருந்து விஞ்ஞானி பாஸ்டியர் என்பவர் அநேகவிதமான சோதனைகள் செய்து நிலை நாட்டியிருக்கின்றார்.

155அப்பா! உயிருள்ளவை இறந்து போகும் என்று கூறுகிறார்களே, அப்படியானால் சாகாத பிராணி கிடையாதா?

ஆம், அம்மா! உயிருள்ளவைகள் எல்லாம் பிறக்கும் வளரும், குஞ்சோ குட்டியோ போடும், பிறகு இறந்து போகும். இதைத்தான் நாம் தினந்தோறும் பார்த்து வருகிறோம்.