பக்கம்:தந்தையும் மகளும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

தந்தையும்

களும் செடிகளும் இறந்த பின் அவை அழுகிப் போகின்றன. அப்பொழுது அவற்றின் உடலிலுள்ள நைட்ரோஜன் காற்றில் வந்து சேர்ந்து நைட்ரோஜன் நஷ்டத்தைப் போக்கிவிடுகிறது. சகல பிராணிகளும் சுவாசிக்கும்போது கரியமில வாயுவை வெளியிட்டுக் கொண்டிருப்பதால் கரியமில வாயு நஷ்டமும் நீங்கிவிடுகிறது.

160அப்பா! சில பிராணிகள் உணவு உண்ணாமல் வாழ முடியும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! எந்தப் பிராணியும் உயிருடன் இருக்க வேண்டுமானால் அதற்கு உணவு வேண்டியது இன்றியமையாததாகும். உணவு தான் உடம்பில் உண்டாகும் தேய்மானததைச் சரியாக்கும், வேலை செய்வதற்கு வேண்டிய சக்தியையும் உஷ்ணத்தையும் கொடுக்கும்.

ஆயினும் குளிர் தேசத்திலுள்ள சில பிராணிகள் குளிர் காலத்தில் உணவு உண்ணாமலே சுருண்டு ஒடுங்கித் தூங்கிவிடுகின்றன. அந்தக் காலத்தில் அவற்றின் உறுப்புக்கள் மெதுவாக வேலை செய்வதால் அவை உடம்பில் சேமித்து வைத்துள்ள கொழுப்புச் சத்தே அவற்றிற்குப் போதுமான போஷணையைத் தந்துவிடுகிறது. அவை குளிர்காலம் போனதும் முன்போல் உயிர்வாழ ஆரம்பித்துவிடுகின்றன.

ஆனால் இவை உணவில்லாமல் உறங்குவது சில மாதங்கள் மட்டுமே. அந்தக் காலத்துக்குப் பின்னும் உணவு உண்ணாமல் போகுமானால் அவை இறந்து போகும். ஆனால் "தார்டிகிரேடா" என்று ஒருவகைச் சிலந்தி யிருக்கிறது. அது ஈரமான இடங்களிலேயே வசிக்கும், ஆயினும் அந்த இடங்களுக்கு அதிலுள்ள காற்றும் ஈரப்பசையே யில்லாத படி உலர்ந்து விடுமானால் அந்தச் சிறு பிராணியும் உயிர் இருப்பதாகச் சொல்ல முடியாத அளவு உலர்ந்துபோகும். நன்றாய்க் காய்ந்த வற்றல் போல் தோன்றும். அவ்வித-