பக்கம்:தந்தையும் மகளும்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

தந்தையும்

போட்டு வைத்துக் கொள்ளும். பிளாட்டிப்பஸ் மாதிரி அடைகாப்பதில்லை அந்தப் பையின் சூட்டிலேயே அடைகாத்தமாதிரி முட்டையிலிருந்து வெளிவரும். அதுதாயிடம் பால் குடித்து வளரும். குட்டியானது பால் குடித்ததும் தாய் அதை மறுபடியும் எடுத்துப் பையில் போட்டு தைத்துக் கொள்ளும். இவ்விதம் குட்டி தாயின் பையிலிருந்து வளர்ந்து வரும்.

162அப்பா! மிருகங்கள் பல் விளக்காவிட்டாலும் அவைகளின் பற்கள் வெண்மையாக இருக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! ஒவ்வொரு மிருகத்துக்கும் ஒவ்வொரு விதமான உணவே ஏற்றது. பசு புல்லைத் தின்னும் மாமிசம் தின்னாது புலி பசித்தாலும் புல்லைத்தின்னாது. மாமிசத்தையே தின்னும் அப்படி மிருகங்கள் தத்தமக்குரிய உணவையே உணணுகின்றன. அதனால் அவைகளுடைய பற்களுக்கு வேண்டிய போஷணை கிடைத்து விடுகிறது.

அத்துடன் மிருகங்கள் தம்முடைய உணவைச் சமைத்து மிருதுவாகச் செய்துவிடுவதில்லை. உணவு மிருதுவாய் விட்டால் அப்பொழுது பற்களுக்கு வேலையில்லாமல் போகிறது. நன்றாக மெல்லும் பொழுதுதான் இரத்தம்

பற்களின் வேர்களுக்கு வந்து சேர்ந்து பற்களைப் போஷிப்பிக்கும். நன்றாக மெல்லுவதால் உணவுத் துண்டுகள் பற்களைத் தேய்த்து சுத்தம் செய்துவிடவும் செய்யும். கரும்பைக் கடித்துத் தின்னும்போது பார்த் தால்