பக்கம்:தந்தையும் மகளும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

159

பற்கள் எல்லாம் நன்றாகப் பல் விளக்கிய மாதிரி வெண்மையாக இருக்கும். அதுபோல் தான் மிருகங்கள் பற்களை விளக்கா விட்டாலும் வெண்மையாக இருக்கின்றன.

ஆனால் நாமோ நம்முடைய உணவுப் பொருள்களை நன்கு வேகவைத்து மிருதுவாக்கி விடுகிறோம். அதனால் நம்முடைய பற்களுக்கு வேலை ல்லாமல் செய்து விடுகிறோம். அதனால்தான் நாம் உண்ணும் பொழுது இறுதியில் நெல்லிக்காய், சீனிக் கிழங்கு,வெள்ளரிக்காய், காரட் கிழங்கு போன்றவைகளைப் பச்சையாக மென்று தின்பது நல்லது என்று வைத்தியர்கள் கூறுகிறார்கள்.அத்துடன் நம்முடைய பற்களுக்கு வேண்டிய கால்ஷியம் முதலிய உப்புச் சத்துக்களும் ஏ, ஸி, டி உயிர்ச்சத்துக்களும் போதுமான அளவு கிடையாமல் போகின்றன. அதனால்தான் நாம் நம்முடைய பற்களை விளக்கியே சுத்தமாகவைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

163 அப்பா! எந்தத் திசையிலிருந்து சத்தம் கேட்கிறது என்பதை நம்மைவிட மிருகங்கள் எளிதில் தெரிந்து கொள்ளுமாமே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அது உண்மைதான். நமக்கு நம்முடைய காதுகளை விரிக்கவும் முடியாது, திருப்பவும் முடியாது. தலையைத்தான் திருப்ப முடியும். அதனால் சப்தம்எந்தத் திசையிலிருந்து வருகிறது என்பதை நாம் நம் தலை முழுவதையும் திருப்பியே அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது,

ஆனால் மிருகங்களோ காதுகளை விரிக்கவும் முடியும். திருப்பவும் முடியும். அதனால் காதுகளை விரித்து சப்தம் முழுவதையும் சேகரித்துக் கொள்கின்றன காதுகளைத் திருப்பி சப்தம் வரும் திசையை அறிந்து கொள்கின்றன.