பக்கம்:தந்தையும் மகளும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

தந்தையும்


164அப்பா! நாய்க்கும் பூனைக்கும் கோரப் பற்கள் இருக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! கோரப் பற்கள் நாய்க்கும் பூனைக்கும் மட்டுந்தான் உண்டு என்று எண்ணாதே, அவை மாமிசம் தின்னும் மிருகங்களுக்கெல்லாம் உண்டு.

அம்மா! ஒவ்வொரு உணவை உண்ணுவதற்கேற்ற மிருகத்துக்கும் அதன் பற்களே அமைந்திருக்கின்றன. ஆடு மாடு போன்ற சாகபட்சணிகள் எதையும் கிழித்துத் தின்ன வேண்டியதில்லை. அதனால் அவைகட்குக் கோரப்பற்கள் கிடையா. அவை உணவை நன்றாக அரைத்தே விழுங்கவேண்டும். அதனால் அதற்கேற்ற அரைவைப் பற்களே அவைகளிடம் காணப்படுகின்றன.

நாய் முதலிய மாமிச பட்சணிகள் மாமிசத்தைக் கிழித்துத் துண்டாக்கி விழுங்கவேண்டி இருப்பதால் அவைகளுடைய வாயில் முன் பக்கம் கோரப் பற்களும் இரண்டு பக்கங்களிலும் துண்டிக்கும் பற்களும் காணப்படுகின்றன. அவைகள் தம் உணவை அரைக்காமல் விழுங்குவதால்தான் அவைகளின் தாடைகள் மேலுங் கீழுமாக மட்டும் அசையக் கூடியனவாயிருக்கின்றன. ஆடு மாடுகள் மாவு அரைக்கும் யந்திரம் போல் தங்கள் தாடைகளைப் பக்கவாட்டில் அசைக்க முடியும்.

நாய் பூனைபோன்ற மிருகங்களுடைய நாக்கும் எலும்பிலுள்ள மாமிசத்தைச் சுரண்டித் தின்பதற்கு ஏற்றதாகச் சுரசுரப்பாகவும் இருக்கிறது. அம்மா! இயற்கை அதற்கு ஏற்ற வண்ணம் உறுப்புக்களை அமைத்திருப்பது ஆச்சரியமாயிருக்கிறதல்லவா?