பக்கம்:தந்தையும் மகளும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

தந்தையும்

கொண்டுயோக மாட்டார்கள். வேட்டை நாய் என்ற ஜாதி நாய்கள் தான் வேட்டைக்கு உகந்தன.

நாய்களை உபயோகிப்பதன் காரணம் யாது? இதர மிருகங்கள் எல்லாவற்றையும் விட நாய்க்குத்தான் வாசனை அறியும் சக்தி அதிகம். ஒருவர் நடந்து போன தடம் ஆயிரம் பேர் போய் அழிந்துவிட்ட போதிலும் அவருடைய வாசனையை அறிந்த நாய் அதை அதிசீக்கிரம் கண்டுபிடித்துவிடும். அதன் காரணம் அதன் மூளையில் பெரும்பாகம் வாசனை உணர்ச்சியைக் காட்டும் வேலையையே செய்து வருவதுதான்.

நாய்க்கு மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகமாக இருப்பது போலவே ஒலிகளைக் கேட்கும் சக்தியும் அதிகம். சாதாரணமாக நமக்குக் கேட்காத சப்தங்கள் எல்லாம் நாய்க்குக் கேட்டுவிடும்.

வேட்டையாடும் பொழுது காட்டிலுள்ள மிருகங்களை மோப்பம் பிடித்தும் அவைகளின் குரலைச் செவிமடுத்தும் வேட்டைக்காரர்களை அம்மிருகங்களுள்ள இடத்துக்கு இட்டுச் செல்வதற்காகவே நாய்களை வேட்டைக்குக் கொண்டு போகிறார்கள்.

175அப்பா! பைத்திய நாய் கடித்தால் நாய்போல் குரைப்பார்கள் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! பைத்திய நாய் என்றால் மனிதனுக்குப் பைத்தியம் பிடிக்கிறதே, அதுபோல் பைத்தியம் பிடித்த நாய் என்பதன்று ஆயினும் நரம்புகளில் உண்டாகும் ஒருவகை விஷத்தால் அது தனியாகத் திரியவும் எதைக் கண்டாலும் குரைக்கவும் செய்வதால் அதைப் பைத்திய நாய் என்று கூறுகிறார்கள்.

அந்த நாய் ஒருவரைக் கடித்தால் அவ்விஷம் நிறைந்த அதன் உமிழ் நீர் அவருடைய இரத்தத்தில் கலந்து அவருக்கும் நாய்க்குள்ள நோய் வந்துவிடுகிறது.