பக்கம்:தந்தையும் மகளும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

தந்தையும்

நடந்து பார். கஷ்டமாயும் இருக்கிறது. அழகாயுமில்லை. அதே மாதிரிதான் குரங்குகளுக்கும் தரையில் நடப்பது கஷ்டமான காரியம். ஆகவே அவை பெரும்பாலும் மரங்களிலேயே வசித்து வருகின்றன.

179அப்பா! சிங்கம் மட்டும் பிணத்தைத் தின்னாது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! அப்படித்தான் மக்கள் எண்ணுகிறார்கள், அதனாலேயே சிம்மத்தைப் புலிபோல் குரூரமுடைய மிருகமன்று என்றும் பெருந்தன்மை உடைய மிருகமென்றும் கூறுகிறார்கள். ஆனால் அப்படிக் கூறுவது தவறு. சிம்மம் பசி வந்து விட்டாலும் சரி, பிரியம் உண்டாய் விட்டாலும் சரி, பிணத்தை மட்டுமன்று, அழுகிப்போன மாமிசத்தைக் கூடத் தின்னும் என்று சிம்மம் போன்ற காட்டு மிருகங்களின் பழக்க வழக்கங்தளைப் பற்றி ஆராய்ந்த பண்டிதர்கள் கூறுகிறார்கள். இதிலிருந்து எதையும் ஆராயாமல் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதை அறிந்து கொள்.

180அப்பா! யானை எப்பொழுதும் நின்று கொண்டிருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நீ கோவிலுக்குப் போகும் சமயமெல்லாம் அங்குள்ள யானை நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறாய். அதனால் அது எந்த நேரத்திலும் கீழே படுக்காமல்

நின்று கொண்டே தான் இருக்கும் என்று எண்ணுகிறாய் ஆனால் யானை எப்பொழுதும் நின்று கொண்டே இருப்பதில்லை. அது அடிக்கடி படுப்பதும் உண்டு.

ஆனால் ஆப்பிரிக்காக் கண்டத்திலுள்ள யானைகள் ஏதேனும்