மகளும்
173
நோயோ காயமோ ஏற்பட்டால் தான் கீழே படுக்குமாம். அதற்குக் காரணம் அதன் கால்கள் சிறிதுகூட வளையாமல் பெரிய தூண்கள் மாதிரி இருப்பதுவே என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அதன் கால்கள் அந்த மாதிரியிருப்பதால் பெரிய தூண்கள் கட்டடத்தைத் தாங்குவது போல யானையின் கால்கள் அதன் பிருமாண்டமான கனம் முழுவதையும் எளிதாகத்தாங்க முடிகிறது என்று சொல்லுகிறார்கள். அதனால் தான் எவ்வளவு நேரம் நின்று கொண்டிருந்தாலும் ஆப்பிரிக்கா யானைக்குக் கால் கடுப்பதில்லையாம்.
181அப்பா! கீரிப்பிள்ளை இருக்குமிடத்தில் பாம்பு வராது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! கீரிப்பிள்ளை உள்ள இடத்தில் பாம்பு வராது என்பதில்லை. பாம்பு வரும், ஆனால் கீரிப்பிள்ளை அதைக் கண்டால் சிறிதுகூட அஞ்சுவதில்லை. அதைக் கண்டதுமே அதற்குக் கோபாவேசம் உண்டாய் விடும். அது என்ன சுாரணமோ யாருக்கும் தெரியாது. அதிலும் அது விஷப் பாம்புகளிலெல்லாம் விஷப்பாம்பாகவுள்ள
நல்ல பாம்பைக் கண்டு விட்டால் அதற்கு வரும்கோபத்தை பார்க்கவேணும். அதன் உடல் சிலிர்த்துவிடும்.பாம்பின் அருகே மெதுவாகச் சென்று அதன்மீது பாய்வதுபோல் பாசாங்கு செய்யும். பாம்பு ஏமாந்து போய் அதைப் பிடிக்கத்தாவும். பாம்புக்கு மின்னல்வேகமுண்டு. ஆனால் அதைவிட வேகமுடையது கீரிப்பிள்ளை.பாம்பு கடிக்க வரும்பொழுது அது விலகிக்கொள்ளும். இறுதியில் பாம்புக்கு ஒன்றும் விளங்காது பிரமித்துப் போய் நின்று விடும். அந்தச் சமயம் பார்த்துக் கீரிப்பிள்ளை பாம்பின் தலையைப் பிடித்து கழுத்தை முறித்துவிடும். அப்படி முறித்து