பக்கம்:தந்தையும் மகளும்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

181

அத்துடன் காற்று மரத்தின் மீது படும் இடத்தின் வரப்பு அதிகம். செடியிலோ மிகக் குறைவு. அதனால் அதிகமான காற்று மரத்தைத் தாக்குகிறது. அது பலமாகவும் தாக்குவதால் மரத்தைச் சாய்த்துவிட முடிகிறது.

192அப்பா! வீட்டுக்குள் சன்னலில் பூத்தொட்டி வைத்தால் அதிலுள்ள செடி சன்னலுக்கு வெளியே தலையை நீட்டுகிறறே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நம்முடைய உடம்பிலுள்ள உறுப்புக்கள் வேலை செய்வதற்கும் நாம் நடமாடுவதற்கும் நமக்குச் சக்தி வேண்டுமே, அது எப்படிக் கிடைக்கிறது? நாம் உணவை உண்ணுகிறோம் காற்றைச் சுவாசிக்கிறோம். உணவிலுள்ள மாப் பொருளானது காற்றிலுள்ள பிராண வாயுவுடன் சேர்ந்து எரிந்து நமக்குச் சக்தியை அளிக்கிறது.

செடியின் உறுப்புகளுக்கும் வேலை செய்ய வேண்டுமே, அதற்கு வேண்டிய சக்தி எப்படிக் கிடைக்கிறது? அதிலும் பொருள் இருந்தால் தான் சக்தி உண்டாகும். அந்தப் பொருளை உண்டாக்கக் கூடிய ஆற்றல் இலைகளுக்கு இருக்கிறது அவை காற்றிலுள்ள கரியமிலவாயுவை கிரகித்து வேர் மூலம் வரும் நீருடன் சேர்த்து மாப்பொருளை உண்டாக்கும். ஆனால் இந்தக் காரியமானது சூரிய வெளிச்சமிருந்தால் தான் நடை பெறும்.

அம்மா! இலைகளின் மீது சூரிய, வெளிச்சம் பட்டால் தான் இலைகள் பச்சையாயிருக்கும், அவைகளில் பச்சை நிறமான குளோரோபில் என்னும் பொருள் உண்டாவதே பச்சை நிறத்துக்குக் காரணம். அந்தப் பச்சை நிறப் பொருள் உண்டானால் தான் இலைகள் மரப்பொருளை உண்டாக்க முடியும்.

அதனால் தான் வீட்டுக்குள் வெயில் வராததால் செடியானது வெயிலை நாடி சன்னலுக்கு வெளியே தலை நீட்ட ஆரம்பிக்கிறது.