பக்கம்:தந்தையும் மகளும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

187

ஆனால் தேனிக்கள் பூக்களிடம் வருவதற்கு உதவியாயிருப்பது எது? பகலில் பூக்களின் அழகான நிறங்களும் இரவில் பூக்களின் வாசனையுமேயாகும். அதனால்தான் பகலில் விரியும் மலர்களுள் பெரும்பாலானவை பல நிறங்களுடையனவாகவும். இரவில் விரியும் மலர்களுள் பெரும்பாலானவை நறுமணமுடையனவாகவும் இருக்கின்றன.

ஆகவே பூக்களிடம் அழகும் மணமும் காண்பது மகரந்தச் சேர்க்கையும் அதன் மூலம் காய் விதை உண்டாவதும் நடைபெறுவதற்காகவே.

199அப்பா! பூக்கள் குவிந்து விடுகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! பூக்கள் குவியாமல் இருந்தால் நல்லதுதான். அதன் அழகைப் பார்த்து மகிழ்ந்துகொண்டே இருக்கலாம். ஆனால் செடிகளில் பூக்கள் உண்டாவது நாம் பார்த்து மகிழ்வதற்காகவா? இல்லை. காய்கள் உண்டாவதற்காகவே. பூக்கள் விரிந்தவுடன் வண்டுகள் வந்து மொய்க்கின்றன. அவற்றின் உதவியால் மகரந்தப்பொடி சூல்முடியில் ஒட்டி ஆல்வயிறு சென்று காய்களாக உண்டாகின்றன. அப்படி வண்டுகள் வந்து மொய்ப்பதற்காகவும் அவை வந்து உதவும் வரை மகரந்தப் பையையும் சூல்வயிற்றையும் பாதுகாப்பதற்காகவுமே பல நிறமான இதழ்களும் மணமும் ஏற்பட்டிருக்கின்றன மகரந்தப் பொடி சூல்வயிற்றுக்குள் போய்ச் சேர்ந்தபின் இதழ்களும் மணமும் தேவையில்லை. அதனுல் தான் இதழ்கள் குவிந்து விடுகின்றன. மணமும் போய் விடுகிறது.

200அப்பா! பூவாமல் காய்க்கும் மரம் உண்டா?

அம்மா! பூக்கள் பார்ப்பதற்கு அழகாயிருக்கின்றன. இன்பமான மணமும் வீசுகினறன. ஆனால் அவை நாம மகிழ்வதற்காகவா பூக்கின்றன? இல்லை. பூவில் காய் உண்டாகி காயிலுள்ள விதைகள் பூமியில் விழுந்து முளைத்து