பக்கம்:தந்தையும் மகளும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

தந்தையும்

இதைத் தடுப்பதற்காகக் காய்கறிகளைச் சிறிதுநேரம் ஆவியில் வைத்தோ அல்லது கொதிக்கும் நீரில் போட்டோ எடுப்பார்கள். பழங்களைச் சர்க்கரைப்பாகில் போட்டு வைக்கலாம், அல்லது சர்க்கரையில் பொதிந்து வைக்கலாம்

204அப்பா! பழங்களும் காய்கறிகளும் அழுகிப்போகின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நீ கூறும் தாவரப் பொருள்கள் மட்டுமல்ல, மாமிசப் பொருள்களும்கூட அழுகிப் போகும். ஆனால் தாவரப் பொருள்களும் மாமிசப் பொருள்களும் தாமாக அழுகிப் போவதில்லை.

அவை அழுகிப் போவதற்குக் காரணம் அவைகளில் பாக்டீரியா உன்னும் நுண்ணுயிர்கள் போய்ச் சேர்வதுதான். அந்த உயிர்கள் பழங்கள் முதலியவைகளை உண்ணுகின்றன. அப்பொழுது உண்டாகும் கழிவுப் பொருள்கள் தான் அழுகும் துர்நாற்றத்தைக் தருகின்றன. துர்நாற்றம் தாவரப் பொருள்கள் அழுகும் போது உண்டாவதைவிட மாமிசப்பொருள்கள் அழுகும் போதுதான் அதிகமாக உண்டாகும்.

அழுகும்படி செய்யும் பாக்டீரியா சூடும் நீரும் உள்ள பொழுதே அதிகமாகப் பல்கிப் பெருகுகின்றன. அதனால் தான் பனிக்கட்டிக் குளிர்ப் பெட்டியில் வைத்திருக்கும் பழங்கள் கெட்டுப் போகாமல் இருக்கின்றன. நாம் காய்கறிகளை வற்றல் போட்டு வைப்பதும் நீரில்லாமல் செய்வதற்காகவே. திராட்சை, பேரீச்சை, அத்தி போன்ற பழங்களையும் வற்றல் போடுவதை நீ அறிவாய்.

205அப்பா! கத்தரிக்காய் முதலிய காய்கறிகளை வற்றல் போடுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! காய் கறிகள் எப்போதும் கிடையாதல்லவா. சில காய்கறிகள் சிற்சில மாதங்களில்தான் கிடைக்கும். ஆனால் காய்கறிகள் கிடையாத காலங்களிலும் நமக்குக் காய்கறிகள் தேவை அல்லவா? அதற்-