பக்கம்:தந்தையும் மகளும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தந்தையும்

அவற்றின் வேகங்களையும் கணக்கிடுகிறார்கள்.அதைக் கொண்டு நட்சத்திரங்கள் இவ்வளவு காலத்தில் இவ்வளவு தூரம் இடம் பெயர்ந்திருக்கின்றன என்று கண்டுபிடித்துக் கூறுகிறார்கள்.

அம்மா! நாம் சூரியன் என்று கூறுவதும் நட்சத்திரம் தான் என்பதை அறிவாய். அது ஒரு செக்கண்டு நேரத்தில் இருபது மைல் வேகத்தில் ஓடுவதாகக் கூறுகிறார்கள். நட்சத்திரங்கள் எல்லாம் இவ்வளவு விரைவாக ஓடிக் கொண்டிருந்தால் அவை ஒன்றோடொன்று மோதிவிடுமே என்று கேட்பாய். ஆனால் நட்சத்திரங்களுக்கு இடையேயுள்ள தூரங்கள் மிக மிக அதிகமாதலால், அவை ஒன்றோடொன்று மோதாமலே விரைவாக ஓட முடியும் என்று வான சாஸ்திரிகள் கருதுகிறார்கள்

12அப்பா! ஒளி தராத நட்சத்திரங்கள் உண்டாமே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! அத்தகைய நட்சத்திரங்கள் இருப்பதாகவே வான சாஸ்திரிகள் கூறுகிறார்கள். அவற்றை அவர்கள் இருண்ட நட்சத்திரங்கள் என்று அழைப்பார்கள்,

சாதாரணமாக நமக்கு மிகவும் குறைந்த அளவு ஒளி தரூம் நட்சத்திரங் கூட 3500 டிக்கிரி உஷ்ணம் உடையது. சில பெரிய நட்சத்திரங்களின் உஷ்ணம் 25 ஆயிரம் டிகிரி வரை இருக்கும், ஆனால் இந்த இருண்ட நட்சத்திரத்தின் சூடு ஆயிரம்

டிகிரிதான். அதனால் தான் அவற்றிடம் ஒளி உண்டாவதில்லை. அப்படியானால் அத்தகைய நட்சத்திரங்கள் இருப்பதாக வான சாஸ்திரிகளுக்கு எப்படித் தெரியும் என்று கேட்பாய்.