பக்கம்:தந்தையும் மகளும்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

31

"எந்தப் பொருளையும் அசையாதபடி போட்டு வைத்தால் எவ்வளவு காலமானாலும் அது அசையாமல் போட்ட படியே கிடக்கும். அதை அசைத்து ஒட்டி விட்டால் எவ்வளவு காலமானாலும் வேறு பொருள் ஏதேனும் தடுக்காத வரைக்கிம் அது, ஓடிக் கொண்டே இருக்கும்” என்பதாகும். இந்த விதியை அனுசரித்துத்தான் பூமி முதலிய கோளங்களின் ஓட்டம் நடைபெற்று வருகிறது.

அப்படியானால் அந்தக் கோளங்களை யார் ஒட்டி விட்டார்கள் என்று கேட்டால் அது யாருக்கும் தெரியாது.ஆனால் அவை ஒட ஆரம்பித்து விட்டபடியால் அவை ஓடிக்கொண்டேதான் இருக்கும். அவற்றைத் தடுத்து நிறுத்த எந்த விதமான பொருளுமில்லை.

அம்மா! நீயும் அண்ணனும் பம்பரம் விடுகிறீர்கள். அவை விரைவாகச் சுழல்கின்றன.ஆனால் கிறிது நேரம் ல்ழன்று விட்டுச் சுழலாமல் கீழே விழுந்து விடுகின்றன.அதற்குக் காரணம் காற்றுத்தான். காற்று மட்டும் இல்லாதிருந்தால் நீங்கள் ஓட்டிய பம்பரமும் சதாகாலமும் ஒடிக் கொண்டேதான் இருக்கும். வானத்தில்நட்சத்திரங்கள் முதலியவை உள்ள இடத்தில் காற்றுக் கிடையாது. அதனால்தான் அவை ஒடிக் கொண்டே இருக்கின்றன.

19அப்பா! வட துருவத்திலும் தென் துருவத்திலும் பொறுக்க முடியாத குளிராக இருக்கும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நாம் பூமியின் நடுவேயுள்ள பூமத்திய ரேகைக்கு அருகே இருக்கிறோம். நாம் வடக்கே போகப் போகக் குளிர் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அது போல் தெற்கே போகும் பொழுதும் அப்படியே குளிர் அதிகரிக்கும். வட துருவத்திலும் தென் துருவத்திலும்