பக்கம்:தந்தையும் மகளும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தந்தையும்

பொறுக்க முடியாத குளிராக இருக்கும். அதற்குக் காரணம் யாது?

1. வட துருவம் 2. தென்துருவம் 3. பூமத்தியரேகை 4. காற்றுமண்டலம் 5. கதிர்கள்

சூரியனுடைய கிரணங்கள் பூமத்திய ரேகை உள்ள இடத்தில் நேராகவும் மற்ற இடங்களில் சாய்வாகவும் வந்துசேர்கின்றன . ஒரே அளவான கிரணங்கள் நேராக வந்து சேருமிடத்தை விடச் சாய்வாக வந்து சேரும் இடம் அதிகப் பரப்புள்ளதாக இருக்கும் அதனால் நேராக வருமிடத்தில் உஷ்ணம் அதிகமாகவும் சாய்வாக வருமிடத்தில் உஷ்ணம் குறைவாகவும் இருக்கும். இந்தக் காரணத்தால்தான் துருவங்கள் அதிகக் குளிர் உடையனவாக இருக்கின்றன.

20அப்பா! அதிகாலையில் அதிகக் குளிராய் இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! காலையில் சூரியன் எழுகின்றது. உடனேயேNபூமி சூடாக ஆரம்பிக்கிறது. அது முதல் சூடு சிறிது சிறிதாக ஏறிக்கொண்டே வருகிறது. பூமியானது சூட்டைச் சூரியனிடமிருந்து பெறுவது போலவே பெற்ற

சூட்டைச் சிறிது சிறிதாக வெளியே வீசிக்கொண்டு இருக்கிறது. ஆனால் சூடு வீசுவது, சூடு பெறுவதைவிடக் குறைவாகவே பிற்பகல் இரண்டு மணி வரை நடைபெறுகிறது. அதனால் பகலில் அதிகச் சூடான நேரம் நடுப்பகல் பன்னிரண்டு மணி என்று எண்ணுகிறோம் அதுவன்று. பிற்பகல் இரண்டு மணியேயாகும்.