பக்கம்:தந்தையும் மகளும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

தந்தையும்

அம்மா! மழை பெய்வதால் தரையில் விழும் தண்ணீரினால் தான் கிணறுகள் உண்டாகின்றன என்பதை நீ அறிவாய். அதுமாதிரி மழை பெய்வதால்தான் சுனைகளும் உண்டாகின்றன. ஆனால் கிணறுகளை நாம் வெட்டுகிறோம், சுனைகள் தாமாகவே உண்டாகின்றன. அது எப்படி என்று கூறுகிறேன் கேள்.

அம்மா! மழை பெய்தால் அந்த நீர் தரையில் ஊறி கீழே இறங்குகிறது. அது பூமியினுள்ளே போகும் போது நீர் புகமுடியாத பாறையைக் காணுமானால் அதனடியில் போகாமல் நின்றுவிடும். நாம் கிணறு வெட்டி அந்த நீரை இறைத்துக் கொள்வோம்.

ஆனால் கீழேயுள்ள பாறை சமதளமாயில்லாமல் இருக்குமானால் அதன்மீது வந்து சேரும் நீர் அந்தப் பாறையின் சரிவில் இறங்கி பாறை முடியும் இடத்தில் சுனையாகக் கொப்பளித்துவிடும். அதனால்தான் சுனைகள் மலைச் சரிவுகளிலேயே காணப்படும்.

27அப்பா! சில இடங்களில் மலைகள் எரிந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! சில இடங்களில் எரிமலைகள் இருப்பது உண்மைதான். ஆனால் அவைகள் எல்லாம் அடுப்பில் விறகு எரிவதுபோல் எரிபவை அல்ல. அவ்வாறு எரியுமானால் விறகு எரிந்து இல்லாமற் போய் விடுவதுபோல அந்த மலைகளும் இல்லாமல் போய்விட வேண்டும் அல்லவா? அவைகள் அவ்விதம் எரிந்து இல்லாமல் போய்விடுவதில்லை.

அம்மா! நாம் பூமி முழுவதும் கட்டியாக இருப்பதாக எண்ணுகிறோமே, அது தவறு. தரையிலிருந்து, கீழே 40 மைல் தூரம்தான் கட்டியான மண், அதற்கப்புறம் உள்ளே மண்ணும் கல்லும் உஷ்ணத்தால் ஒரே குழம்பு-