பக்கம்:தந்தையும் மகளும்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

41

ஆம் அம்மா! ஆறுகள் அனைத்தும் கடலிலோ ஏரியிலோ அல்லது வேறு ஆற்றிலோதான் போய்ச் சேரும். ஆயினும் கிரீஸ் தேசத்துக்கு அருகிலுள்ள செபலோனியா என்னும் தீவில் நீ கேட்கிற மாதிரி கடலிலிருந்து பூமிக்குள் போகும் ஒரு ஆறு இருக்கிறது. அங்கே கடல் நீரானது மணிக்கு இரண்டு மைல் வேகத்தில் நூற்றைம்பது அடி தூரம் பூமியின் மீது செல்லுகிறது. அப்படிச் செல்லும் நீர் 150 அடி தூரம் சென்றதும் அங்குள்ள பாறைகளின் இடையே பாய்ந்து மாயமாக மறைந்து விடுகிறது அப்படி மறைவதற்குக் காரணம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.

30அப்பா! பாலைவனங்களில் மழை பெய்யாவிட்டாலும் சுனைகளும் மரங்களும் உள்ள இடங்கள் உண்டு என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! பாலைவனங்களில் அதிகமாக மழை பெய்வதில்லை என்பது உண்மைதான். உலகத்திலுள்ள பாலைவனங்களுள் மிகப் பெரியது ஆப்பிரிக்காக் கண்டத்திலுள்ள ஸஹாரர பாலைவனம் தான். அங்கே அபூர்வமாகவேதான் மழை பெய்யும். அநேக சமயங்களில் மழையானது கீழே இறங்கும் போதே உஷ்ணமிகுதியால் ஆவியாக ஆகி, தரைக்கு வந்து சேராமல் போகும்.

ஆயினும் அங்கே நீ கூறும் சுனைகளும் மரங்களும் உள்ள ஜீவபூமிகள் பல காணப்படவே செய்கின்றன. அவற்றுள் சில இருபது லட்சம் மக்கள் வாழக்கூடிய அளவு பெரியதாகக்கூட இருக்கும் அப்படியானால் அங்கே நீர் இருப்பதற்குக் காரணம் யாது!

அருகிலுள்ள மலைகளின் மீது பெய்யும் மழையானது அங்கே தரையில் ஊறும் போது அடியில் பாறை இருக்குமானால் கீழே இறங்க முடியாது. அப்பொழுது அந்த நீர்