பக்கம்:தந்தையும் மகளும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தந்தையும்

பாறைக்கு மேலாகவுள்ள மண்ணின் வழியாக தரையின் அடியே மலைச்சரிவில் இறங்கும், அப்படித் தரைக்கு அடியே இறங்கும் நீர் பாலைவனத்தின் அடியிலும் வந்து சேர்ந்து சுனைகளாக கொப்புளித்துவிடும். அத்தகைய இடங்களில் கிணறுகளும் வெட்டலாம். இந்த விதமாகத்தான் பாலைவனங்களில் நீரும் மரமும் காணப்படுகின்றன.

31அப்பா! கருங்கடல், வெண்கடல், செங்கடல் என்று பல நிறக்கடல்கள் இருப்பதாகக் கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

ஆம்,அம்மா! சாதாரணமாகக் கடலானது நீல மாநிறகத்தானிருக்கும். ஆனால் ஐரோப்பாவுக்கும் - சின்ன ஆசிய நாட்டுக்கும் இடையே ஒரு சிறு கடல் இருக்கிறது. அதைத்தான் கருங்கடல் என்று கூறுகிறார்கள். அங்கே குளிர் காலத்தில் மூடுபனி அதிகம். அது அக்கடலில் படிந்திருக்கும்போது அதன் நீர் இருண்டு தோன்றும். அதைக் கண்டு ஆதியிலிருந்த ரோம் சாதியார் அதற்குக் கருங் கடல் என்று பெயர் கொடுத்தார்கள்.

ருஷ்யாவின் வட பாகத்தில் ஒரு பெரிய வளைகுடா இருக்கிறது. அது ஆழமாக இல்லாமல் அதிகக்குளிரான பிரதேசத்தில் இருப்பதால் அதன் நீர் அக்டோபர் மாதம் முதல் மே மாதம் வரை பனிக்கட்டியாக உறைந்து போயிருக்கும். அதனால் அதனை வெண்கடல் என்று கூறுகிறார்கள்.

அம்மா! அரேபியாவுக்கும் ஆப்பிரிக்காவுககுமிடையில் ஒருகடல் இருக்கிறது இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்குச் செல்லுல் கப்பல்கள் அதன் வழியாகத்தான் செல்லும். அதில் செந்நிறமான நுண்ணிய உயிர்கள் ஏராளமாகக் காணப்படுவதால் அக்கடலின் நீர் சிவந்தே தோன்றும். அதனால் அந்தக் கடலைச் செங்கடல் என்று சொல்லுகிறார்கள்.