பக்கம்:தந்தையும் மகளும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மகளும்

47

இந்த உண்மையை ஆதாரமாகக் கொண்டதே டீஹட்ரோபோன் என்பது. இந்தக் கருவியை நீருக்குள் தொங்கவிட்டு கப்பல் போகும் திசையில் திருப்பி வைத்துக் கொண்டு ஓசைசெய்வார்கள். அந்த ஓசையில் எதிரொலியைப் பெறுவதற்காக அதில் ஒரு வாய் இருக்கும். எதிரொலி அதில் வந்து சேர்வதை கப்பலில் உள்ளவர்கள் அறிந்து கொள்வார்கள். ஒலி கடலுக்குள் போய் எதிரொலயாகி வர எவ்வளவும் நேரமாயிற்று என்று தெரிந்து கொண்டு அது முட்டிய பாறை இவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று தெரிந்து கொள்வார்கள். இந்தக் கருவியைக்கொண்டுதான் கடலின் ஆழத்தையும் கண்டுபிடிக்கிறார்கள்.

36அப்பா! குண்டூசியைக் கீழே தேய்த்துக் கன்னத்தில் வைத்தால் சூடாயிருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! குண்டூசிதான் தேய்த்தால் சூடாகும் என்று எண்ணாதே எந்தப் பொருளைத் தேய்த்தாலும் சூடு உண்டாகவே செய்யும் அதற்குக் காரணம் என்ன?

அம்மா! பொருள்கள் எல்லாம் அணுக்களால் ஆகியவை என்பதை அறிவாய். ஒவ்வொரு பொருளிலும் அதிலுள்ள அணுக்கள் சதாகாலமும் அசைந்து கொண்டே இருக்கின்றன. இந்த அணு அசைவுதான் நமக்கு உஷ்ணமாகத் தெரிகிறது. அதிகமான அசைவானால் அதிகமான உஷ்ணம், குறைவான அசைவானால் குறைவான உஷ்ணம்.

நீ குண்டூசியைக் கீழே தேய்க்கும் பொழுது அதிலுள்ள அணுக்கள் முன்னிலும் அதிகமாக அசைய ஆரம்பிக்கின்றன. அதனால் அதைக் கன்னத்தில் வைத்ததும் உஷ்ணமாகத் தெரிகிறது. நீ கடுதாசியில் பென்சிலைக் கொண்டு எழுதியதை ரப்பர் கொண்டு அழிக்கிறாயே, அப்பொழுதும் உஷ்ணம் உண்டாகிறது. ஆனால் அதன் அளவு சிறிதாக இருப்பதால் உஷ்ணமாகத் தெரியவில்லை