பக்கம்:தந்தையும் மகளும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தந்தையும்

அம்மா! எது எரியவேண்டுமானாலும் அதற்குப் பிராண வாயு அவசியம் தேலை என்பதை அறிவாய். விறகு கடிட்யாயிருக்கிறது, அதனால் அதனிடம் பிராண வாயு அதிகம்இருக்க முடியாது. ஆனால் அந்த விறகைச் சிறு சிராய்களாக உடைத்து விட்டால் அப்போது அந்தச் சிராய்களிடம் அதிகமான பிராணவாயு தங்கி நிற்கமுடியும். அதனால் தான் உன் தாயார் தீக்குச்சியைக் கிழித்து விறகில் வையாமல் சிராயில் வைக்கிறாள். சிராய் எளிதில் தீப்பிடித்துக் கொள்கிறது. அந்த உஷ்ணம் அதிகமாகவே அதனுடன் வைக்கப்பட்டுளள விறகும் தீப்பற்றிக் கொள்கிறது. இதே காரணத்தினால் தான் அம்மா! சில வேளைகளில் உன் தாயார் சிராய்க்குப் பதிலாக கடுதாசித துண்டுகளை உபயோகிக்கிறாள்.

41அப்பா! அடுப்பில் வைக்கும் விறகு முதலில் கரியாகிப் பிறகு கடைசியில் சாம்பலாகி விடுகிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! விறகு என்பது மரம்தானே மரம் தினந்தோறும் காற்றிலிருந்து கரியையும் மண்ணிலிருந்து பல விதமான ரஸாயனப் பொருள்களையும் கிரகித்து, மாப்பொருள், ஊன்சத்து, கொழுப்புப் பொருள் முதலியவற்றை உண்டாக்கிக் கொள்கின்றன என்பது உனக்குத் தெரியும். அதனால் விறகை அடுப்பில் வைத்து எரிக்கும் பொழுது முதலில் அதிலுள்ள எண்ணெய் முதலிய பொருள்கள் ஆவியாக மாறி வெளியே போய் விடுகின்றன. அதனால் தான் விறகு எரியும் பொழுது முதலில் அது கரிபோல் கறுப்பாக ஆகிவிடுகிறது. பிறகு கரி முழுவதும் காற்றிலுள்ள பிராண வாயுவுடன் சேர்ந்து கரியமலவாயு உண்டாகி வெளியே போய்விடுகிறது. ஆகவே கடைசியில் எஞ்சி நிற்பது சில உப்புவகைகள்தான். அவற்றைத்தான் நாம் சாம்பல் என்று கூறுகிறோம்.