பக்கம்:தந்தையும் மகளும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

தந்தையும்

அம்மா! சட்டங்களை பலமாக இறுக்குவதற்கு இரும்பு ஆணியை உபயோகித்தால் குளிர் காலத்தில் இரும்பு ஆணி சுருங்கும். மரச்சட்டம் விரியும், ஆனால் இரும்பு, சுருங்கும் அளவு மரம் விரிவதில்லை. ஆதலால் சட்டம் இறுக்கமாக இராமல் நெகிழ்ந்து போகும்,

ஆனால் ஆணி மரத்தால் செய்ததாயிருந்தால் ஆணியும் சட்டமும் ஒரே அளவாகவே சுருங்கவும் விரியவும் செய்யும். அதனால் சட்டம் இறுக்கமாக இருக்கும், கழன்றுவிடாது.

இங்கிலாந்திலும் மர ஆணி உபயோகிப்பதுண்டு. அதற்குக் காரணம் வேறு. இங்கே தேக்கு மரம் மிகச் சிறந்த மரமாக இருப்பதுபோல் அங்கே ஓக் மரமே மிகச் சிறந்தது. அது ஒரு வகை எண்ணெய்ச் சத்து உடையது. அந்தச் சத்து இரும்பைத் தின்றுவிடும். அதனாலேயே அந்த மரத்தால் சாமான்கள் செய்யும் போது மர ஆணியை உபயோகிக்கிறார்கள்.

50அப்பா! சுவர்க் கடிகாரம் வேனிற் காலத்தில் மெதுவாக ஓடுகின்றதே, அதற்குக் காரணம் என்ன?

ஆம், அம்மா! வேனிற் காலத்தில் அந்தக் கடிகாரத்தைப் பார்த்தால் மணி பிந்தத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் கூறுகிறேன் கேள்.

அம்மா! சுவர்க் கடிகாரத்தில் ஒரு நீண்ட மெல்லிய கம்பியில் ஒரு வட்டு மாட்டித் தொங்குகிறது. கடிகாரத்தை ஓட்டுகிறவர்கள் முதலில் சாவி கொடுக்கிறார்கள். பிறகு அந்தத் தொங்கட்டானை ஆட்டி விடுகிறார்கள். அது ஊசலாடுகிறது.

அது வலது பக்கமோ இடது பக்கமோ எவ்வளவு தூரம் ஆடினாலும் மணியில் வித்தியாசம் எதுவும் ஏற்படாது. ஆனால் வட்டுத் தொங்கும் கம்பி நீளமாயிருந்தால் மெது-