பக்கம்:தந்தையும் மகளும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தந்தையும்

அவையுள்ள பாட்டிலைத் திறந்தால் போதும், உடனேயே ஆவியாக மாறி வெளியே போய்விடும். அதனால் தான் அந்தப் பாட்டில்கனை மூடியே வைத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

59அப்பா! சிமிண்டு போட்ட தரை செங்கல் தரையைவிட அதிகமாகக் குளிர்ந்திருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

ஆம். அம்மா! செங்கல் தளத்தைவிட சுண்ணாம்புத்தளம் குளிர்ந்திருக்கும். சுண்ணாம்புத் தளத்தைவிட சிமிண்டுத் தளம் குளிர்ந்திருக்கும். அதற்குக் காரணம் என்ன?

அம்மா! உஷணத்தைக் கிரகித்துக்கொள்ளும் சக்தி செங்கல்லுக்கு உள்ளதைவிட சுண்ணாம்புக்கு அதிகம். அதனால் செங்கல்லைத் தொட்டால் அது அநேகமாக நம்முடைய கையிலுள்ள உஷ்ணத்தைக் கிரகியாமல் இருந்து விடுகிறது. அதனால் அது குளிர்ந்திருப்பதுபோலத் தோன்றுவதில்லை. ஆனால் சுண்ணாம்புத் தளத்தைத் தொட்டால் அது கையிலுள்ள உஷ்ணத்தைக் கிரகித்துக் கொள்ளும். ஆதலால்தான் அது குளிர்ந்திருப்பது போன்ற உணர்ச்சி உண்டாகிறது.

சிமிண்டுத் தளமோ சுண்ணாம்பையும்விட அதிகமாக உஷ்ணத்தைத் கிரகிக்கக் கூடியதாகும். அதனால்தான் வெயில் காலத்தில் தொட்டால் கூட அது நிரம்பக் குளிர்ந்து தோன்றுகிறது.

60அப்பா! வேனிற்காலத்தில், வெட்டிவேர்த் தட்டிகள் தொங்க விடுகிறார்களே, அதற்குக் காரணம் யாது?

அம்மா! வேனிற்காலத்தில் வெயில் கடுமையாகக் காய்கிறது. நமக்கு நிரம்பக் கஷ்டமாகத் தோன்றுகிறது. நீ இதை கவனித்திருக்கிறாய் அல்லவா? அதன் காரணம் என்ன தெரியுமா?