பக்கம்:தந்தையும் மகளும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

தந்தையும்

நீ ஊதிய காற்றும் இருக்கிறது. நம்முடைய உடம்பிலிருந்து சுவாசத்தின் மூலமாக வெளியே வரும் காற்று எப்பொழுதும் வெளியிலுள்ள காற்றைவிட உஷ்ணமானது. உஷ்ணமான காற்று உஷ்ணம் குறைவான காற்றை விடக் கனம் குறைந்தது, ஆதலால் சோப்புக் குமிழியிலுள்ள காற்று மேலே செல்லுகிறது. அது செல்லும் போது சோப்பு நீர்த்தோலையும் தன்னுடன் கொண்டு செல்லுகிறது.

ஆனால் அந்தத் தோல் மிகவும் மெல்லிய தல்லவா? அதனால் அதனுள் உள்ள காற்று சீக்கிரமாகக் குளிர்ந்து விடுகிறது. அதனால் அது சோப்பு நீர்த் தோலை தூக்கிக் கொண்டு மேலே செல்ல முடியாமல் போகிறது. ஆதலால் தான் மேலே சென்ற சோப்புக் குமிழிகள் சிறிது நேரம் சென்றதும் கீழே வந்துவிடுகின்றன.

81அப்பா! தண்ணீர்த் துளிகள் எப்பொழுதும் உருண்டையாக இருக்கின்றனவே, அதற்குக் காரணம் என்ன?

ஆம் அம்மா! தண்ணீரை சுத்தமான தட்டில் தெளித்தால் அந்தத் தண்ணீர் சிறு சிறு துளிகளாக உருள்வதைப் பார்க்கலாம். தாமரை இலையில் தண்ணீர் பட்டால் அது இந்த மாதிரி உருண்டு பள பள வென்று அழகாய் இருப்பதைப் பார்த்திருக்கிறாய். இம்மாதிரி தண்ணீர் உருள்வதற்குக் காரணம் என்ன?

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை விளிம்பு வரை ஊற்றினால் அது வழிந்துவிடாமல் இருக்கிறதல்லவா? தண்ணீரின் மேற்பரப்பிலுள்ள அணுக்கள் ஒன்றையொன்று சேர்த்து இழுத்துப் பிடித்துக் கொள்கின்றன. அதனால் அவை ஒரு மெல்லிய தோல்போல் அமைந்துவிடுகிறது. இந்தத் தோல்தான் அதன் அடியிலுள்ள நீரை வழிந்துவிடாமல் தடுக்கின்றது. இந்த மாதிரி இழுத்துப் பிடித்து நிற்கும் சக்தி தண்ணீருக்கு இருப்பது போலவே தர திரவங்களுக்கும்