பக்கம்:தந்தையும் மகளும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

தந்தையும்

அம்மா! உலகத்தில் காணப்படும் ஒவ்வொரு வஸ்துவும் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய மூலக்கூறுகள் என்பவைகளால் ஆனவை என்று நீ அறிவாய். அவை ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டிருப்பதில்லை. இடைவெளிகள் உடையனவாகவே இருக்கின்றன. அத்துடன் அவை இடைவிடாமல் ஆடி அசைந்து கொண்டும் இருக்கின்றன. சூடுபட்டால் அவை அதிகமாகவும் வேகமாகவும் அசையும். அதனால் இடைவெளிகள் அகலமாய்விடும். மூலக்கூறுகள் முன்னிலும் அதிகமாக விலகி விலகி இருக்கும்.

அவ்விதமே இரும்புக்கம்பியை உலையில் காய்ச்சும் பொழுது அதிலுள்ள மூலக்கூறுகள் அதிகமாக விலகி விடுகின்றன, அதனால்தான் அதை வளைக்க முடிகிறது. சூடாயுள்ள கம்பி முன்போல் குளிர்ந்துவிடுமானால் மூலக்கூறுகளும் முன்போல் நெருங்கிவிடும். அதனால் கம்பியை அப்பொழுது வளைக்க முடியாமற் போகிறது.

86அப்பா! இயந்திர சாலைகளில் உள்ள புகை போக்கி அதிக உயரமாயிருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நாம் வீட்டில் அடுப்பில் விறகு வைத்து எரிப்பது போலவே இயந்திர சாலைகளிலும் விறகோ நிலக்கரியோ எரிக்கிறார்கள். விறகு எரிந்தாலும் நிலக்கரி எரிந்தாலும் அது காற்றிலுள்ள பிராணவாயுவுடன் சேர்ந்து கரியமிலவாயு ஆகிறது. அத்துடன் எரிக்கும் விறகும் கரியும் முற்றிலும் எரிந்து விடுவதில்லை. ஒரு பாகம் எரியாமல் புகையாகப் போகின்றது. கரியமில வாயுவும் புகையும் நமக்கும் பிராணிகளுக்கும் நல்லதில்லை. மரங்களையும் கரியாக்கி அழகில்லாமல் செய்துவிடும். அதனால்தான் .