பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

422

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


சமயத்தைச் சமய நூல்களை இலக்கியத்தைத் தமிழில் கொண்டு இருக்கிறோம்! சரி! இதற்கு மேலும் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும்?

எவ்வளவோ வேலை செய்ய வேண்டி இருக்கிறது. ‘மந்திரி பதவியில் உட்கார்ந்து கொண்டு, தமிழுக்குக் கேடு வந்தால் பதவியை விட்டுவிடுகிறேன்’ என்கின்ற மந்திரிக்கும், ஊர் ஊராய்த் திரிந்து குட்டிச் சுவராக வேண்டிய கோயில்களை எல்லாம் கட்டி முடிக்கின்ற திருப்பணியில் இருந்த மந்திரிக்கும் (பக்தவத்சலம்) தரத்தில் என்ன வித்தியாசம்? நான் இதை மந்திரி மீது குறைகூற எழுதவில்லை ; மந்திரிக்கு உள்ள பகுத்தறிவு எனக்கு நன்றாய்த் தெரியும்!

ஏன், பாமர மக்களுக்கு வழியல்லா வழியில் பயப்பட வேண்டும்? என்பதற்காகவே எழுதுகிறேன் தமிழ் பற்றிய இந்தக் கருத்து, என் இன்றையக் கருத்தல்ல! இந்தி எதிர்ப்புக் காலந்தொட்டு எனக்கு இந்தக் கருத்துதான். இது மந்திரிகளுக்கும், தமிழுக்காக இன்று பாடுபடுபவருக்கும் தெரியும்!

அடகெடுவாய் பலதொழிலும் இருக்கக், கல்வி
        அதிகமென்றே கற்றுவிட்டோம், அறிவில் லாமல்!
திடமுளமோ கனமாடக், கழைக்கூத் தாடச்
        செப்பிடுவித் தைகளாடத் தெரிந்தோ மில்லை!
தடமுலைவே சையராகப் பிறந்தோ மில்லை;
        சனியான தமிழைவிட்டுத் தைய லார்தம்
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோ மில்லை!
        என்னசென்ம மெடுத்துலகில் இரக்கின் றோமே?

தமிழ் படித்தால் பிச்சைகூடக் கிடைக்கவில்லை ; தமிழ் படித்தது பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில்லை என்பதோடு, இதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால் வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்பதையும், 100 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ் கற்ற அனுபவப் புலவர் மேற்கண்ட பாடல் மூலம் எடுத்துக் காட்டி இருக்கிறார்”.

யார் ஆட்சிக்கு வந்தால் என்ன? அரசியல் நிலையினை இனநலம் என்ற அளவு கோலால் அளந்து பார்த்து, இந்த ஆட்சி நமக்குப் பயன்படுமா? தமிழர் நலனுக்குப் பாதுகாப்பாக இருக்குமா? உரிமைகள் பறிபோகாமல் காப்பாற்றப்படுமா? சமதர்மம் தழைக்குமா? பகுத்தறிவு ஓங்குமா? என்று பார்ப்பதுதானே பெரியாரின் கொள்கை இந்தப் பொதுத் தேர்தலுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே பெரியார் தீர்க்க தரிசனத்துடன், அரசியல் முன்கணிப்புத் திறனுடன், ஒன்று கூறியிருந்தார். 1.1.62 “விடுதலை” தலையங்கப் பகுதியில் “இனி கண்னரீர்த்துளிக் கட்சி, தேர்தலுக்குப் பிறகு இந்த