பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

440

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


நலிவுற்றுச் சுரம் வந்து, 17-ந்தேதி திருச்சியிலிருந்து புறப்பட்டு, அதே 18-ந் தேதி மீண்டும் சென்னைப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர் இறங்குவதில் பழையபடி தொல்லை பரிதாபத்துடன் பார்த்த டாக்டர்களிடம், “இந்த முறை நீங்கள் எவ்வளவு நாள் என்னை இங்கே இருக்கச் சொல்கிறீர்களோ அவ்வளவு நாள் இருக்கிறேன்" என்று பெரியார் உறுதியளித்தார். மருத்துவமனையில் தங்கியிருந்த நாட்களில், முதல்வர் அண்ணா , கலைஞர் மு.க., சத்தியவாணி முத்து, ஏ.கோவிந்தசாமி, மா.முத்துசாமி, சி.பா. ஆதித்தனார், மேயர் இரா.சம்பந்தம், ஜி.டி. நாயுடு, அவினாசிலிங்கம் செட்டியார், டாக்டர் ஆர்.ஜி. கிருஷ்ணன், பி.ஜி. கருத்திருமன், கே.டி.கே.தங்கமணி, மன்றாடியார், எம்.கல்யாணசுந்தரம், வ.சுப்பையா, பாலதண்டாயுதம் மோகன் குமாரமங்கலம், தங்கவேலர், டாக்டர் அண்டே ஆகியோர் வந்து, விசாரித்துச் சென்றனர். 4.8.67 இரவு காமராசர் வந்து பார்த்துச் சென்றார். அதன் பிறகு அன்றிரவே வீடு திரும்பி, உடனே திருச்சி புறப்பட்டார் பெரியார்.

இதற்கிடையில் 18.7.67 அன்று. தமிழகச் சட்ட மன்றத்தில், மெட்ராஸ் ஸ்டேட் கிடையாது. ஆங்கிலத்திலும் தமிழிலும் இது தமிழ் நாடுதான் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. சபாநாயகர் அனுமதியுடன் முதல்வர் அண்ணா மும்முறை முழங்க, அனைவரும் ‘வாழ்க’ என்று பின் தொடர்ந்து முழக்கமிட்டது, வரலாறு தழுவிய உணர்ச்சி மிக்க நாளின் வெற்றிக் குறிப்பாகும். 23.7.67 அன்று, மத்திய அரசின் கவனத்தை ஈர்த்துக் காரியம் விரைவில் நடைமுறைக்கு வரத் தி.மு.க. எழுச்சி நாள் கொண்டாடியது. அதாவது சேலம் இரும்பாலைத் திட்டமும், தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுகத் திட்டமும் முன்னுரிமையுடன் நிறைவேற்றப்பட! காங்கிரசார் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் முதலியவற்றில் ஈடுபடவேண்டாம், என்று கூறிவிட்டார் காமராசர். “இதற்கெல்லாம் ஒரே வழி நாட்டுப் பிரிவினைதான்! அதுதான் Surgeon‘s Cure பெரியார் வழி! எழுச்சி நாள் Physician’s Cureதி.மு.க. வழி என்று 25ந்தேதி “விடுதலை” எழுதியது. அடுத்த நாள் ‘வரவேற்கத்தக்க பிரகடனம்’ என்று. அவைனவருக்கும் கல்வி வசதியளிக்கப்படும் என்ற திட்டம் குறித்து எழுதியது. நடிகர் எம்.ஜி. ராமச்சந்திரன், நடிகவேள் எம்.ஆர். ராதா சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு வழக்கு, செங்கற்பட்டு செஷன்ஸ் கோர்ட்டில் 27-ந்தேதி முதல் விசாரணை என்றும், வழக்கு விசாரணையில் பப்ளிக் பிராசிக்யூட்டர் பி.ஆர். கோகுலகிருஷ்ணன், சர்க்கார் தரப்பில் வாதாடுவார் என்றும், செய்தி வெளியானது. 3.8.67 அன்று, நன்னிலம் தாழ்த்தப்பட்ட தொகுதிச் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராஜின் காலை