பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

443


கூட்டம் நடத்துவோம். ஊர்வலம் எடுப்போம். 9 பேர் கொண்ட சிவசேனை எதிர்ப்புக் குழு அமைக்கிறேன்.” என்று பெயர்களையும் அறிவித்தார் பெரியார். - ஈ.வெ.ரா மணியம்மையார், என். வி. விசாலாட்சி அம்மையார், எம்.என். நஞ்சய்யா, கு.கிருஷ்ணசாமி, என்.எஸ். சம்பந்தம், என். செல்வேந்திரன், புலவர் கோ. இமயவரம்பன், தோலி ஆர்.சுப்ரமணியம், டி.எம். சண்முகம் - ஆகியோர் குழுவினர்.

வாடிக்கை தவறாமல் இந்த 89 வது பிறந்த நாளிலும் பெரியார் தமது செய்தியைச் சுருக்கமாக வழங்கியிருந்தார்:- “எனக்கு இன்று முதல் 89 வது வயது தொடங்குகிறது. என் வாழ்வு என்னவோ கவலை தொல்லை துன்பங்களுக்கு ஆட்பட்டதாய் இருந்தாலும், சராசரி மக்கள் வாழ்க்கைக்குக் குறைந்ததாய் இல்லாமல், மேம்பட்ட வாழ்வாகவே நடந்திருக்கிறது. காரணம், அக்காலத்தில் ஈரோட்டில் எங்கள் கடைதான் பெரிய கடை. எங்கள் வீடு தான் பெரிய வீடு, எங்கள் தகப்பனார்தான் ஊருக்குப் பெரிய மனிதருங்கூட.

மக்கள் மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமென்பதிலும், மக்களைப் பகுத்தறிவு வாதிகளாக ஆக்க வேண்டும் என்பதிலும், எனக்கு 1927 ஆம் ஆண்டு முதல் உறுதியான எண்ணமும், ஆசையும் உண்டு. ஆதிக்கத்தினால்தான் பார்ப்பான், சாதி மத அரசியல் ஆதிக்கத்தில் இருந்து கொண்டு, சமுதாய வளர்ச்சியையும் அறிவு விஞ்ஞான வளர்ச்சியையும் தடை செய்து கொண்டு இருக்கிறா என்பது எனது உறுதியான எண்ணம். நான் எந்த ஸ்தாபனம் வைத்திருந்தாலும், எந்தக் கட்சியை ஆதரித்தாலும், யாரோடு சேர்ந்தாலும், யாரை விரோதித்தாலும் அவற்றிற்கெல்லாம் இதுவே காரணம்!

இப்போதும், காங்கிரஸ்காரர் பலரை வெறுக்கிறேன் என்பதற்கும், தி.மு.க காரர் பலரை நேசிக்கிறேன் என்பதற்கும் இதுவேதான் காரணம்! இந்திய சரித்திரத்திலேயே புத்தன், அசோகன் ஆட்சிக்குப் பிறகு, நமது நாட்டுக்கு இன்றுதானே பகுத்தறிவாளர் (நாத்திகர்) ஆட்சி ஏற்பட்டிருக்கிறது? இதை ஆத்திகர் எதிர்க்கலாம் ஆளால் பகுத்தறிவாளர் (நாத்திகர்) என்பவர்களின் கடமை என்ன? அரசியலில் குற்றம் குறை என்பது, யாருடைய ஆட்சியிலும், எந்த அளவுக்காவது நடந்துதான் தீரும்! என்றாலும் இதில் சுயமரியாதை இயக்கத்தார் - திராவிடர் கழகத்தார் கடமை என்ன என்பதை நல்ல வண்ணம் சிந்தித்து நடந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் சரிபகுதி காங்கிரசிற்கு எதிர்ப்பாகி விட்டது. என்றாலும், காங்கிரசார் மக்களைத் தங்கள் பக்கம் திருப்பிட, மக்களிடம் பிரச்சாரம் செய்வதை விட்டு விட்டு, எதிர்ப்பு ஸ்தாபனங்களை அழிக்கப் பாடுபடுகிறார்கள். இது தும்பை