பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

456

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


காமராஜர்கூட“மொழி மசோதாவால் விபரீதமே விளையும். நாடு பிரிய வழி வகுக்கும்” என்று எச்சரித்ததை “விடுதலை” முதல் பக்க பேனராக வெளியிட்டது 18-ந்தேதி. தலையங்கமும் “ஆட்சி மொழி மசோதாவா? இந்தித் திணிப்பு மசோதாவார் என்று எழுதிற்று. முதல் பக்கம் ”தமிழ்நாடு தனிச் சுதந்திர நாடாக மாறினால் ஒழியத் தமிழர் தன்மானத்தோடு வாழ முடியாது. ஈ. வெ. ராமசாமி“ என்றும், 3-ம் பக்கம் தோழர்களே! காமராஜர், ராஜாஜி, அண்ணாதுரை ஆசி நமக்கு இருக்கிறது. நமது நாடு முழுச் சுதந்திரம் அடைய சுதந்தரப் படையில் சேருங்கள்- ஈ.வெ.ரா.” என்றும் கட்டம் கட்டிய கொட்டை எழுத்து வாக்கியங்கள் பிரசுரமாயின.

காமராசர் தலைவர் பதவியை நிஜலிங்கப்பாவுக்குத் தர இருப்பதாகச் செய்திகள் வந்தன. மாணவர் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிகளை நாடெங்கும் துவக்கினர். 21-ந் தேதி நாடாளுமன்றத்தில், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு (பிரிவினைத் தடுப்பு) மசோதா நிறைவேற்றப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களும், கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் மசோதாவை எதிர்த்து வெளி நடப்புச் செய்தனர். தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் துரோகம்: செய்து விட்டதாக முரசொலி மாறன் எம்.பி. குற்றம் சாட்டியிருந்தார். “விடுதலை” ஆசிரியர் வீரமணி, தமது மனைவி, பிள்ளைகளுடன், விமான மூலம் மலேசியா, சிங்கப்பூர் பயணமானார். 25. 12.67 அன்று மாலை 3.20 மணிக்கு அவர்களை வழியனுப்பி வைக்க, மணியம்மையார் விமான நிலையம் வந்திருந்தார். பெரியார் சுற்றுப் பயணத்திலிருந்தார். 21-ந் தேதி “விடுதலை”யில் பிரிவினை எதிர்ப்புச் சட்டம் என்ற தலையங்கத்தில், “தி.மு.க. மந்திரிகள் தவிர, மற்றத் தோழர்களெல்லாரும் முன் வாருங்கள். போராட்டம் துவக்குவோம்” என்று பெரியார் எழுதினார்.

சென்னை அண்ணாமலை மன்றத்தில் தமிழ் இசைச் சங்க மாநாட்டில், இராஜாஜியையும் வைத்துக் கொண்டு அண்ணா, “பெரியார் கருத்தை ஒப்புக் கொள்ளாதிருக்க முடியுமா? பிரிவினை வேண்டாம் என்று சொல்ல எனக்கும் மனம் இடந்தரவில்லையே!” என்று சொன்னார். உடனே பெரியார் இதனை ஏந்திக் கொண்டு, 22.12.67 தலையங்கத்தில் “பிரிவினை அவசியமா இல்லையா?” என்று கேட்டு; “நான் வேண்டுமானால் என்னுடைய ஜாதிப் போராட்டத்தை ஒத்தி வைக்கிறேன்; இந்தத் தென்னாடு விடுதலைப் போராட்டத்தை முன்னிட்டு அண்ணாவின் அண்ணாமலை மன்றப் பேச்சு எனக்கு மிகுந்த தைரியத்தைக் கொடுத்தது. போராட்டம் துவக்க வேண்டியது தான்! இந்திய அரசாங்கம் இருக்குமா, விலகுமா?” என்று துணிவுடன் எழுதினார். இராஜாஜியின் 90-வது பிறந்த நாள் விழாவில், 26.12.1967