பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/464

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

463


தீர்மானத்தை வாபஸ் பெற வேண்டும்” என்று கோரினார். அன்று மேலவையில் பேசும்போது, மொழிப் பிரச்சினை குறித்துத் தாம் விரைவில் காமராசருடன் பேசப் போவதாகக் குறிப்பிட்டவாறு, 23ந் தேதியன்றே , இரவு 9 மணி முதல் 11 மணி வரை, எ.வி.பி. ஆசைத்தம்பி இல்லத்தில் காமராசருடன் பேச்சு வார்த்தை நடத்தினார் அண்ணா . “மோசடியான இந்திய யூனியனும், சுப்ரீம் கோர்ட்டும், பார்ப்பனர்களும் தமிழன் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கின்றனர். பார்ப்பான் பண்ணையில், அதாவது டி.டி.கிருஷ்ணமாச்சாரி, ஆர்.வெங்கட்ராமன் மந்திரிகளாயிருந்ததில், பார்ப்பனத் தொழிலதிபர்கள் கொழுத்தனர். தமிழ் நாடு தனிப்பண்ணையாவது மிகமிக அவசியம். உரிமையின் பாற்பட்ட பிரிவினை, சட்ட விரோதம் என்கிறார்கள். சட்ட விரோதமாகவே நாச வேலையில்லாமல் அமைதியாகத் தனி நாடு பெறுவோமே”, என்றும்; “நம் நாட்டில் பொருளாதார வளர்ச்சியும்” வீக்கமும் அளவுக்கு மீறிப் போனதால், நம் மக்கள் மேலும் காட்டுமிராண்டி நிலைமைக்குப் போகிறார்கள்! ஒவ்வொருவனும் 2, 3 லட்சத்துக்கு வீடு கட்டுகிறான். 20 ஆயிரம் 30 ஆயிரம் நகை செய்து கொள்கிறான். 3,000 ரூபாயில் சேலை எடுக்கிறான். 30, 40 லட்சம் திருப்பதி உண்டியலில் போடுகிறான்” என்றும்; “உலகத்தில் 75 கோடி கிறிஸ்துவர்களுக்கு ஏராளமான நாடுகள், 40 கோடி முஸ்லீம்களுக்கும், பல கோடி பவுத்தர்களுக்கும் எத்தனையோ நாடுகள், ஆனால் 40 கோடி இந்துக்கள்-அதிலும் பல சாதிகளுக்கு - ஒரே நாட்டான் ஆட்சி தேவையா?” என்றும், பெரியார் கருத்தை எழுத்தில் வடித்தார்.

23.2.68 அன்று “விடுதலை” பணிமனை ஊழியர்கள், மலேசியா சென்று வந்த ஆசிரியர் வீரமணிக்குப் பெரியார் தலைமையில் பாராட்டு விருந்து நடத்தினர். சிங்கப்பூர் “தமிழ் முரசு” ஏடு வீரமணியின் பேட்டியைச் சிறப்புடன் வெளியிட்டிருந்தது. பெரியாருக்குப் பின்? என்ற கேள்விக்கு, திராவிடர் கழகம் தொடர்ந்து செயல்படும், பெரியாரின் நூல்களே எங்களை வழிநடத்தும் என்றார். உங்கள் பத்திரிகை அதிக விநியோகமுள்ளதா? என்று கேட்டபோது: அதிகமாகப் படிக்கப்படும் பத்திரிகை “விடுதலை” என்றார் வீரமணி. சென்னை 2வது வட்டத்தில் எஸ்.ஆர். சாண்டோ தலைமையில் பெரியார் பேசும்போது, “தீ பரவட்டும் நூலின் ஆசிரியர்தான் இன்றைய முதல்வர் அண்ணாதுரை. ஆனால் தேர்தலின்போது இராமாயண எரிப்புச் சம்பந்தமாக ஒன்றும் சொல்வதில்லை. அண்ணாதுரை அவர்களுக்கு அவ்வளவு ஞானமிருந்தும், ஓட்டுக்காக வாயை மூடிவிட்டார். ஓட்டும் தடதடவென்று விழுந்தது. பதவி வந்தது. பழைய ஞானமும் வந்துவிட்டது! இப்போது பகுத்தறிவு வாதியாகவே நடந்து கொள்கிறார்; நாத்திகராகவே காட்டிக் கொள்கிறார். பார்ப்பான் ஜெயித்து விட்டான்; நான் தோற்றுவிட்டேன் என்று அறிக்கை