பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

தந்தை பெரியார்



பேசினால் நாங்க வாழ முடியாது. சீக்கிரமா இங்கிருந்து போங்க! யாராவது பார்த்துட்டா - காளியோட அப்பாவுக்குத் தான் கஷ்டம் வரும்” என்று பயத்தால் உடல் நடுங்கக் கூறினாள் காளியின் தாய்.

அதற்கு மேலும் அங்கிருப்பது நல்லதல்ல என்று நினைத்தார் இராமசாமி.

“சரி ரொம்ப தாகம்; கொஞ்சம் தண்ணி கொடுங்க!” என்றார். “தண்ணியா கேக்கிறீங்க” என்ற காளியின் தாயாருக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.

“சின்ன எசமான்,உங்களுக்குத் தண்ணிகூடக் கொடுக்க முடியாத பாவிங்க நாங்க” என்றாள். “நீங்க என்கையால தண்ணி வாங்கிக் குடிச்சசேதி தெரிஞ்சா - எங்க குடிசை மட்டுமல்ல; இந்தத் தெருவையே கொளுத்திருவாங்க. உங்க தயவிலே வாழ விடுங்க. என் மகன் கூடப் பேசாதீங்க - சேராதீங்க! அவனை விட்டுவிடுங்க!” என்ற காளியின் தாய் கையெடுத்துக்கும்பிட்டாள்.

இராமசாமி குடிசையை சுற்றுமுற்றும் பார்த்தார். ஒரு மூலையில் தண்ணீர் பானை மூடியிருந்தது. அதன் மீது அலுமினியக்குவளை-அந்தக்குவளையால் தாகம் தீரத் தண்ணீரை மொண்டு குடித்தார்.

இந்தக் காட்சியைப் பயந்து நடுங்கியபடி பார்த்துக் கொண்டிருந்தனர் காளியும், காளியின்தாயும். குடிசையை விட்டு வெளியேறி நடந்தார்.

கீழ்சாதியினரின் முழு உழைப்பையும் அங்கீகரித்துக் கொண்டு அவர்களை மட்டும் தீண்டத்தகாதவர்கள் என்று முத்திரைகுத்தி ஒதுக்கி வைத்திருக்கும் மேல்