பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தந்தை பெரியார்


ஈ.வே.ரா.வும் தன்னுடைய சேர்மேன் பதவியை ராஜினாமா செய்தார். அதை வாபஸ் வாங்கும்படி இராசகோபாலச்சாரியார் கூறியும் ஈ.வே.ரா. இணங்கவில்லை. அதனால் இராசகோபாலாச்சாரியாரும் நண்பரைப் பின்பற்றி ராஜினாமாச் செய்தார்.

1918-களில் நடைபெற்ற காங்கிரசு மாநாடுகளை ஈ.வே.ரா. முன்னின்று நடத்தினார். 1919ம் ஆண்டு காங்கிரசு இயக்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்ததும், தனது ஈரோடு நகர மன்றத் தலைவர் பதவியை விட்டு விலகினார்.

காந்திஜி, மதுவிலக்குத் திட்டம்; திண்டாமை ஒழிப்பு ஆகியவைகளை காங்கிரசில் கொண்டு வந்தார்.

1920-ம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தினார் காந்திஜி.

ஈ.வே.ரா.வை, இத்திட்டங்கள் பெரிதும் கவர்ந்தன. அதனால் தனது முழுநேர உழைப்பையும் காங்கிரசுக்கு அர்ப்பணித்தார். தாம் வகித்து வந்த பற்பல பதவிகளிலிருந்தும் விலகிக் கொண்டார்.

ஈரோடு நகரில் காங்கிரசு இயக்கம் ஈ.வே.ரா.வின் முயற்சியால் தீவிரம் அடைந்தது. பொதுத் தொண்டில் தன் முழு நேரத்தையும், ஈ.வே.ரா. செலவிட்டார்.

அதனால் வியாபாரத்தை அவரால் ஒழுங்காகக் கவனிக்க முடியவில்லை. தந்தையார் காலத்திலிருந்து சிறப்போடு நடைபெற்று வந்த மண்டிக் கடையை மூடும் படியாயிற்று.

காந்திஜியாலும், அவரது மதுவிலக்கு, தீண்டாமை போன்ற கொள்கைகளினாலும் ஈர்க்கப்பட்ட ஈ.வே.ரா.