பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

9



சாதியினரிடம் அவர்களுக்குள்ள பயமே இதற்குக் காரணம் என்று எண்ணிய இராமசாமியின் நெஞ்சு துடித்தது" என்று எழுதும் நீலமணியின் வரிகளால் கண்கள் பனிக்க மேலே படிக்க விரிகிறது விழிகள்.

இப்படித் தந்தை பெரியாரின் வரலாற்றை வடித்துத் தரும் நீலமணியின் எழுத்துக்கு நிகர் வேறெதுவுமில்லை.

"செந்தாமரைப் பூவின் அழகையும், மணத்தையும் மனிதன் நேசிக்கிறான். அந்தப் பூவும் அவனுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் அது பிறந்த சேற்றையும் சகதியையும் கேவலமாக வெறுக்கிறான், அசிங்கமாகக் கருதுகிறான்" இந்த உவமையைக் காட்டி உள்ளங்கொதித்த தந்தை பெரியாரைப் போல் இதயங்கலங்குகிறார் நீலமணி.

காளியின் வீட்டு நிகழ்வோடு வேறு ஒரு வீட்டின் நிகழ்ச்சியைக் காட்டுகிறார்.

தன் ஆசிரியர் வீடு இருக்கும் தெருவில் நுழைந்தார் இராமசாமி - தாகம் எடுத்தது. ஆசிரியர் வீட்டை அடைந்தார், அருந்த நீர் கேட்டார் - ஆசிரியர் மகள் நீர் கொணர்ந்தாள்; குவளையில் நீர் ஊற்றினாள் - அதை வாங்க நீட்டினார் கையை, கையில் தராது தரையில் வைத்தாள். இராமசாமி குடிக்கத் துவங்கும்போது "எச்சில் பண்ணாமெத் தூக்கிக் குடிங்க" என்றாள், - இராமசாமி அப்படியே குடித்தார் - குவளையைக் கீழே வைத்தார். வைத்த குவளையின்மீது இரண்டு முறை நீரை ஊற்றிக் கழுவி, சுத்தமானதாக எண்ணிய பிறகே உள்ளே எடுத்துச் சென்றாள். ஆசிரியரின் மனைவி இதை