பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தந்தை பெரியார்


மகாநாட்டிலும் நிறைவேற்ற ஈ.வெ.ரா. கொண்டு வந்த போதெல்லாம்; வரிசையாகத் தோற்கடிக்கப் பட்டன.

இறுதியாக இப்போது காஞ்சிபுரத்தில் 1925-ல் நடந்த மகாநாட்டிலும் தீர்மானம் தோல்வியடையவே, ஈ.வெ.ரா. இனி இந்த இயக்கத்திற்காக உழைப்பது வீண் என உணர்ந்தார்.

பிராமணரல்லாதாரின் நலனுக்காகக் கொண்டு வந்த தீர்மானம்; பார்ப்பனரல்லாதாராலேயே தோற்கடிக்கப்பட்டது.

- வகுப்புகளை ஒழிக்காமல் ஏற்றுக் கொண்டு; அதற்கான பிரதிநிதித்துவ உரிமையை மட்டும் மறுப்பது என்பது, எந்த விதத்திலும் ஈ.வெ.ரா.வுக்கு நியாயமான செயலாகப் படவில்லை. அதனால் -

1919-ம் ஆண்டு முதல் ஆறு ஆண்டு காலம், காங்கிரசின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டுத் தொண்டாற்றிய ஈ.வெ.ரா. 1925-ம் ஆண்டு காங்கிரசை விட்டு வெளியேறினார்.

தேசிய வாதிகளின் உள்ளத்தில் வருணாசிரம கொள்கை கூடாது. 'வருணாசிரமக் கொள்கையை' ஆதரிக்கும், காங்கிரசை; அக்கட்சிக்கு வெளியே இருந்து எதிர்ப்பது என முடிவு செய்தார்.

1926-ம் ஆண்டு சென்னை சட்டமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. காங்கிரசுக்கு எதிராக நின்ற நீதிக் கட்சி படு தோல்வி அடைந்தது. ஈ.வெ.ரா. நடுநிலை வகித்தார்.

காங்கிரசின் மீதுள்ள கோபத்தில் நீதிக் கட்சியில் சேர்ந்தார் ஈ.வெ.ரா.