பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

117


"தோல்வியைக் கண்டு துவளாதீர்கள்; தமிழர்களுக்காகப் பாடுபட வாருங்கள்", என்று அறைகூவல் விடுத்தார் ஈ.வெ.ரா.

நீதிக்கட்சியில் ஈ.வெ.ரா. சேர்ந்தபிறகு அது மீண்டும் வளர்ச்சி பெற்றது. காங்கிரஸ்காரர்கள் அக்கட்சி மீது கூறி வந்த பொய்ப் பிரசாரத்திற்கு பதில் கொடுத்தார்.

1926-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25, 26 தேதிகளில் இரண்டு நாள் மதுரையில் ஈ.வெ.ரா. பார்ப்பனரல்லாதார் மாநாடு ஒன்றை நடத்தினார்.

பல தலைவர்கள் ஈ.வெ.ரா.வுக்கு ஆதரவு தந்தனர்.

காங்கிரசை விட்டு கோபித்துக் கொண்டு ஈ.வெ.ரா. வெளியேறியது காந்திஜிக்குத் தெரிய வந்தது.

1927-ம் ஆண்டு காந்திஜி தமிழ் நாட்டிற்கு வந்த போது, ஈ.வெ.ரா.வை சந்தித்து, அவரது கோபத்திற்கான காரணத்தைக் கேட்டறிந்தார்.

ஈ.வெ.ரா. குடும்பத்தினர் மீது காந்திஜிக்கு எப்போதுமே ஒரு தனி அன்பும் மரியாதையும் உண்டு. ஈ.வெ.ரா. எதிலும் தீவிரமாகவும், உண்மையாகவும் உழைக்கக் கூடியவர் என்கிற நம்பிக்கை காந்திஜிக்கு இருந்தது.

அதனாலேயே -

கதர் இயக்கத்திற்கு ஈ.வெ.ரா.வைப் பொறுப்பாக நியமித்தார்.

ஓர் உண்மையான தொண்டனின் கோபத்தையும் மனக்குறையையும் தீர்க்க வேண்டியது ஒரு தலை