பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

தந்தை பெரியார்



யெல்லாம் அருகில் இருந்து சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள். இராமசாமி அப்படியே குன்றிப் போனார்.

ஆசிரியர் வைதீகர் - தேசிகர் குலத்தைச் சேர்ந்த பிள்ளைமார். அவர்கள் மற்றவர்களைவிடத் தங்கள் சாதியே உயர்வு என எண்ணுபவர்.

"இப்போது - காளியின் வீட்டில் நீர் அருந்தியதே மகிழ்ச்சி ஊட்டுவது போல் தோன்றியது" என்று இந்நிகழ்ச்சியை வரைகிறார் நீலமணி. பெரியாரின் உள்ளம் பேருள்ளம். அது தீண்டாமையை ஒழிக்கத் திரண்டு எழுந்த தீக் காற்று என்று கூறாது கூறும் நீலமணி அவர்களின் எழுத்து.

சிந்தனை அறிவால் சிறகடிக்கும் பறவையாகத் திகழ்ந்த தந்தை பெரியாரின் வரலாற்றின் ஒவ்வொரு பகுதியும் பகுத்தறிவும் - பண்பும் மிளிர்வதைக் காட்டுகிறார் நீலமணி.

மணவாழ்க்கையில் இராமசாமிக்கு வாழ்க்கைத் துணைநலமாக வந்த நாகம்மை - கற்பனையில் எண்ணி உவக்கும் வள்ளுவரின் வாசுகியாக வாழ்ந்ததை மிகச் சிறப்பாக எழுதுகிறார்.

ஒவ்வொன்றையும் சுட்டினால் நூலுள் நுழையும் யாவர்க்கும் - நம்பியின் ஆக்கிரமிப்பு அதிகம் என்று தோன்றும்.

பொது வாழ்க்கையின் புனிதமாகத் திகழ்ந்தார் பெரியார் இதை விரிக்கும் விதம் - மிகச்சிறப்புடையது.

மொத்தத்தில் ஏழையின் ஏற்றத்திற்குச்செய்யும் தொண்டு!