பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தந்தை பெரியார்


வனின் கடமை என்று கருதியே காந்திஜி இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். ஆனால் காந்திஜியின் சமாதானத்தை ஈ.வெ.ரா. ஏற்கவில்லை.


24. தொழிலாளர்களின் தோழர்...

"எந்தக் காரணத்தைக் கொண்டும் பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும், பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், அவர்கள் ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான், தொழிலாளர் கிளர்ச்சியின் முக்கியத்துவமாக இருக்க வேண்டும்."

- தந்தை பெரியார்

பொது மக்களுக்கு உண்மையான தொண்டு செய்ய எண்ணுபவர்களுக்கு எந்தக் கட்சியோ அரசியல் சார்போ எதுவும் தேவையில்லை என்பது ஈ.வெ.ராவின் கருத்து.

இரயில்வே தொழிலாளர்கள், வேலை நிறுத்தம் செய்தார்கள். சட்ட விரோதமானது என்று அதை அரசாங்கம் அறிவித்தது.

தொழிலாளர் ஆத்திரம் கொண்டு, பலாத்காரத்தில் ஈடுபட்டார்கள்.

அரசின்தடை உத்தரவைக் கேட்டு, அதுவரை தொழிலாளரை ஆதரித்த கட்சிகள் பேசாமல் இருந்து விட்டன.

ஈ.வெ.ரா. தடையுத்தரவை மீறி தொழிலாளர்களுக்காகப் பல கூட்டங்களில் பேசினார். அவர்களது கோரிக்கைகள் நியாயமானவை; ஏற்கப்பட வேண்டியவை என்று குடியரசு பத்திரிகையில் எழுதினார்.