பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

119


தொழிலாளர்களுக்காக கூட்டம் போட்டு பொது மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

அரசு அவரைக் கைது செய்தது. பல குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தின் முன் வைத்தது.

ஈ.வெ.ரா. எதிர் வழக்காட மறுத்துவிட்டார்.

சிறை தண்டனை ஏற்கத் தயாராயிருந்த ஈ.வெ.ராவை அரசு விடுதலை செய்து விட்டது.

அதன்பிறகு, சுயமரியாதை இயக்க மகாநாடுகளைக் கூட்டி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படப் பாடு பட்டார்.

சாதியை ஒழிக்க, கலப்புத் திருமணம் ஒன்றுதான வழி என்று திடமாகக் கூறினார்.

விதவைப் பெண்களுக்கு மறுவாழ்வு உண்டு என்று வலியுறுத்தினார்.

1909 - ல் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் தனது தங்கை மகளுக்கு விதவா மறுவிவாகம் செய்து வைத்தவர் ஈ.வெ.ரா.

எதற்கும், எதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ஈ.வெ.ரா.

தமிழ்நாட்டில் அவரது சுயமரியாதை இயக்கம் வளர்ந்தது. தமிழர்களின் உள்ளங்களில் தந்தை பெரியார் இடம் பெற்றார்.

ஈ.வெ.ராவின் புகழ், கடல் கடந்தும்; அன்னிய மாநிலங்களுக்கும் பரவி; அழைப்புகள் வந்தன.