பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தந்தை பெரியார்


மலேயாவில் நடைபெறவிருக்கும் சுயமரியாதை மாநாட்டிற்கு வரவேண்டும் என ஈ.வெ.ராவை அழைத்தார்கள்.

1929 - ம் ஆண்டு, டிசம்பர் 15ம் நாள் தன் மனைவி நாகம்மையாருடனும், தன் நண்பர்கள் சிலருடனும் ஈ.வெ.ரா. மலேயா புறப்பட்டார்.

மலேயாவிலுள்ள தமிழர்கள் ஈ.வெ.ராவை அன்புடன் வரவேற்றார்கள்.

சாதி ஒழிப்பு, கலப்புத் திருமணம், சுயமரியாதை ஆகியவை பற்றிய ஈ.வெ.ராவின் சீர்திருத்தக் கருத்துக் களைக் கேட்ட மலேயா மக்கள், அறியாமையிலிருந்து விடுபட்டார்கள்.

ஈ.வெ.ராவின் பேச்சில் ஒரு புதிய உலகத்தை அவர்கள் கண்டார்கள். பகுத்தறிவுவாதிகளாக மாறினார்கள்.

மலேயாவில் ஈ.வெ.ரா ஒருமாத காலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள பல ஊர்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்துத் தமது கொள்கையைப் பரப்பினர்.

1930-ம் ஆண்டு ஜனவரி மாதம், தமிழகம் திரும்பிய ஈ.வெ.ராவுக்கு சென்னையில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து -

1930, மே மாதம் 10,11 தேதிகளில், ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. இம்மகாநாட்டின் விசேஷம் என்னவென்றால்,