பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

125


ஈரோட்டிலிருந்து சென்ற ஆள், ஈ.வெ.ராவிடம் நாகம்மையாரின் மோசமான நிலைமையையும், அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதையும் எடுத்துக் கூறினார்.

ஆனால், இதைக் கேட்டதும் - ஈ.வெ.ரா. உடனே புறப்பட்டு விடவில்லை.

மகாநாட்டில் தன் முழு உரையையும் முடித்த பின்னரே புறப்பட்டார்.

ஈரோட்டு மிஷன் ஆஸ்பத்திரியில் நாகம்மையார், கணவரைக் காணும் கடைசி ஆசையும் நிறைவேறாமலே, 1933 -ம் ஆண்டு மே மாதம், உயிர்துறந்தார்.

ஈ.வெ.ரா. ஊர்வந்து, நாகம்மையாரைக் காண ஆஸ்பத்திரி சென்றபோது -

நாகம்மையாரின் உயிரற்ற உடல்தான் அவரை வரவேற்றது.

எதற்கும் அஞ்சாத ஈ.வெ.ராவை -

எதற்கும் கலங்காத ஈ.வெ.ராவை -

நாகம்மையாரின் மரணமும் கலக்கவில்லை.

அன்பே உருவானவர் நாகம்மையார்.

எந்த நேரத்தில், யார் தன் வீடு தேடி வந்தாலும், அவர்களை வாயார உபசரித்து; வயிரார உணவளித்து அனுப்புவார்.

மாமன், மாமியைத் தன் இரு கண்கள் போல் போற்றிக் கடைசிக் காலம்வரைத் தொண்டு செய்தவர்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்.