பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

127


27. பெண்கள் மாநாடு சூட்டிய
'பெரியார்' பட்டம்

★ சகோதரிகளே! ஆண்கள் பார்க்கும் எல்லா வேலைகளையும், ஆண்கள் செய்யும் எல்லாத் தொண்டுகளையும் பெண்கள் செய்ய முடியும் என்பேன்.

★ பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்; அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகவே!

★ நமது பெண்கள் தங்களைப் பிறவி அடிமைகள் என்று நினைத்துக் கொண்டிருப்பதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

★ பெண்ணடிமை என்பதற்குள்ள காரணங்கள் பலவற்றுள்ளும், சொத்துரிமை இல்லாதது ஒன்றே மிகவும் முக்கியமானதாகும்.

★ இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் வேதனையையும்; இழிவையும்; அடிமைத் தனத்தையும் விட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள்.

- தந்தை பெரியார்

நாகம்மையாரின் மரணத்திற்குப் பிறகு ஈ.வெ.ரா. சுயமரியாதைப் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.

பல மகாநாடுகளைக் கூட்டினார். காரசாரமாகக் குடி அரசுப் பத்திரிகையில் விமரிசனங்கள் எழுதினார்.

பெரியார் குடி அரசு இதழில் ஒருநாள்; 'இன்றைய ஆட்சிமுறை ஏன் ஒழிய வேண்டும்' என்பதை, தமக்கே உரிய பாணியில் விளக்கி, விரிவாக ஒரு தலையங்கம் எழுதினார். விளைவு?