பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

11



கீழ் சாதியினரின் கீழ்மையை ஒழிக்க

அவர் போராடிய போராட்டம்!

குடும்ப வாழ்க்கையிலும் இயக்க வாழ்க்கையே

மேலானது என எண்ணிய பெரியாரின் நெஞ்சு உரம்.

சிறைப்பறவையாய் சிறகடித்த செயல்.

பொது வாழ்க்கைக்காக தன் சொத்தை

தென்னைமரத் தோட்டத்தைக் கள் அரக்கனை ஒழிக்க அழிப்பதில் அவர் காட்டிய ஆர்வம்!

இப்படி ஒவ்வொன்றாக எழுதினால் - முற்றுப் பெறாத தொடராக அணிந்துரை வளரும்.

சுயமரியாதைச் சுடராய்ப் பெரியார் வலம் வந்த நாட்களிலும்; -இளம் வயதில் தன் மீது காதல் கொண்டு வாழ்ந்த நாட்களிலும்; - தன்னோடு இணைந்து பணியாற்றி இரண்டறக் கலந்த தன் துணைவி, உடல் நலங்குன்றிக் கிடந்தபோது; - அருகில் இருந்து அரவணைத்தாரில்லை. திருப்பத்துார் கூட்டத்திற்குப் பெரியார் போய்விட்டார்.

மனைவி மரணப் படுக்கையில் என்று தெரிந்த போதும் - 'கூட்டத்தில் பேசி முடித்து வருவேன்' என்று பேசினார். பிறகு ஈரோடு வந்தார். மனைவியை உயிர் அற்ற சடலமாகப் பார்த்தார். சஞ்சலம் பட்டாரா? இல்லை! - கண்களில் நீர் வழியாமல் பெரியார் பார்த்து நின்ற நிகழ்ச்சியை நீலமணி எழுதும்போது - நம் கண்களில் அருவி பாய்கிறது.