பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தந்தை பெரியார்


முதல் அமைச்சர் வீட்டுமுன் மறியலைக் கைவிடும்படி ஈ.வெ.ரா. அறிக்கை விட்டார். அதன்படி மறியல் நிறுத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கும் இளைஞர் படை திரண்டு, ஈரோட்டிலிருந்து சென்னையை நோக்கிப் புறப்பட்டது.

சென்னை கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து பிரும்மாண்டமான, கூட்டத்தில் ஈ.வெ.ரா. 'தமிழ்நாடு தமிழருக்கே’, என்று முதல் முழக்கம் செய்தார்.

இந்தி எதிர்ப்புப் போரில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர். ஆயிரத்தி ஐநூருக்கும் மேற்பட்ட வீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த மொழிப் போராட்டத்தில் ஆண்களுக்குச் சமமாகப் பெண்களும் பங்கேற்றனர்.

1938 -ம் ஆண்டு நவம்பர் 3 ம் நாள், சென்னையில் மறைமலையடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையார் தலைமையில் தமிழ் நாட்டுப் பெண்கள் மகாநாடு கூடியது.

பெண்களும் மொழிப் போரில் பங்கேற்று சிறை செல்லும் தீர்மானம் நிறைவேறியது. அதன்படி டாக்டர். தருமாம்பாள், மூவலூர் இராமமிர்தம் அம்மாள் ஆகியோர் சிறை சென்றனர். இம்மகாநாட்டில் -

பெண்களை விழிப்புணர்வூட்டி, வீறுகொள்ளச் செய்த பேச்சுக்காகவே ஈ.வெ.ரா. கைது செய்யப்பட்டார்.