பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

131


அதனால் -

"ஈ.வெ.ராவின் பெயரில் முன்னால் 'பெரியார்’ என்று சேர்த்துக் கூறவேண்டும்” என்று இப்பெண்கள் மகாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அன்று முதல் ஈ.வெ.ரா. இறக்கும் வரை தமிழ்நாட்டு மக்கள் அவரை அன்புடன் 'பெரியார் ஈ.வெ.ரா' என்றே அழைக்கலாயினர்.

1938 -ம் ஆண்டு டிசம்பர் மாதம், பெரியார் ஈ.வெ.ராவுக்கு நீதிமன்றம், இரு குற்றங்களுக்காகத் தனித்தனியாக ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

சிறைக் கோட்டத்தை ஒரு தவக்கோட்டமாகக் கருதி பெரியார் ஈ.வெ.ரா. அதை ஏற்றார்.


28. பொதுத் தொண்டு செய்பவனுக்கு
பதவிகள் எதற்கு?

"சமுதாயத் தொண்டு செய்வது இலேசான காரியமல்ல; கடவுள் தொண்டு, தேசத் தொண்டு, என்பவைகளை யாரும் செய்யலாம்;

சமுதாயத் தொண்டு செய்வது சிறுமைக்கும், எதிர்ப்புக்கும், மானாவமானத்திற்கும் உரியதானதால் யாரும் இத்தொண்டிற்கு முன் வருவது கிடையாது."

- தந்தை பெரியார்

நீதிக் கட்சியின் 14-வது மகாநாடு, 1938-ம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் நடைபெற்றது.