பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

133


சென்னையை ஆண்டுவந்த இராசகோபாலாச்சாரியார் தனது முதல் மந்திரிப் பதவியை இழந்திருந்தார்.

இராசகோபாலாச்சாரியார், ஆளுநரின் ஆணைப்படிப் பெரியாரைச் சந்தித்தார்.

நீதிக் கட்சியின் தலைவராயிருந்த பெரியாரை, மாநில முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு இராசகோபாலாச் சாரியார் கேட்டுக்கொண்டார்.

தமக்கு அப்பதவி தேவையில்லை என்று பெரியார் திடமாகக் கூறிவிட்டார்.

1940-ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கரின் அழைப்பை ஏற்று பெரியார் பம்பாய் சென்றார்.

தீண்டாமை ஒழிப்பு, ஆலயப் பிரவேசம் போன்ற கொள்கைகள் மூலம் அம்பேத்கர் பெரியாரை நன்கு அறிந்து வைத்திருந்தார்.

பம்பாய் வந்த பெரியாருக்கு அம்பேத்கர் பெரிய விருந்து கொடுத்தார். வரவேற்புக் கூட்டத்தில் பேசிய அம்பேத்கர், 'பெரியாரின் சேவை, இந்தியாவிலுள்ள அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தேவை' - என்று புகழ்ந்து கூறினார்.

பின்னர் பெரியாரை, அம்பேத்கர் ஜின்னாவிடம் அழைத்துச் சென்று, தென்னாட்டில் பெரியார் செய்து வரும் தொண்டுகளைப் பெருமையோடு எடுத்துக் கூறினார்.

ஜின்னா பெருமையோடு கை குலுக்கித் தன் கருத்துக்களையும் கூறினார்.