பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தந்தை பெரியார்


அம்மகாநாட்டில் பழைய மிராசுதாரர்கள் தங்களது பலத்த எதிர்ப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்தி பெரியார் கொண்டு வந்த தீர்மானங்களை எதிர்த்தனர்.

'தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்ய எண்ணினால் - மேல்மட்டத்தினர் விரும்புவதில்லை; எதிர்க்கிறார்களே' என்று வேதனை அடைந்த பெரியார் -

'சுயமரியாதை இயக்கம்; தென்னிந்திய நல உரிமைச் சங்கம்; ஆகிய பெயர்களை மாற்றி, தனது; புதிய கழகத்தின் பெயரைக் கூறினார். கழகத் தொண்டர்கள் பெரிய கரவொலி எழுப்பி, அக்கழகத்தை வரவேற்றனர். ஆம்! வரலாறு படைக்கப்போகிற புதிய கட்சியின் பெயரல்லவா அது!


30. திராவிட வானில் கறுப்புச்
சூரியனின் உதயம்

"மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடமையோடும், ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராய்ச்சி செய்து, காலத்திற்கும், அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும்."

- தந்தை பெரியார்

சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 16 - வது மகாநாடு ஒரு புதிய விடியலுக்கு வித்திட்டது.

27.8.1944 -ல் நடைபெற்ற அம்மகாநாட்டில் பெரியார், தனது கட்சியின் பழைய பெயர்களை