பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

139


யெல்லாம் ஒருங்கிணைந்த கட்சியாக, "திராவிடர் கழகம்" என்றும் புதிய பெயரைத் தன் கட்சிக்குச் சூட்டினார்.

அறிஞர் அண்ணா அன்று முதல் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார், அத்துடன்,

பெரியாரின் 'விடுதலை' என்னும் நாளேட்டின் ஆசிரியராகவும், அண்ணாவைப் பெரியார் நியமித்தார்.

இளைஞர்களின் இதயங்களைத் தமது அடுக்கு மொழிப் பேச்சால் கொள்ளை கொண்டு வந்த அறிஞர் அண்ணா குரல், தொடர்ந்து விடுதலை ஏட்டில் முழங்கியது.

அண்ணாவின் எழுத்தில், சுயமரியாதைக் கொள்கைகளும்; சீர்த்திருத்தக் கருத்துக்களும்; கதைகளும், மக்களைக் கழகத்தின்பால் கவர்ந்து இழுத்தன.

பெரியார் 1944 -ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடை பெற்ற 'ரேடிகல் டெமாக்ரடிக்' கட்சி மகாநாட்டில் கலந்து கொண்டார்.

கல்கத்தாவில் உலக சமூக சீர்திருத்தவாதியான எம்.என். இராய் பெரியாரை அன்புடன் வரவேற்றார்.

பெரியாரை எம்.என். இராய் தனது ஆசான் என்றும், தனது நாத்திகக் கொள்ளைக்கு வழிகாட்டியவர் என்றும் மாநாட்டில் போற்றிப் புகழ்ந்தார்.

கல்கத்தா மாநாடு முடிந்து, கான்பூர் சென்றார் பெரியார். அங்கு நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர்