பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

தந்தை பெரியார்


இதன் விளைவாக தாய்க்கழகம் பிளவுண்டது.

17.11.1949 -ம் ஆண்டு அண்ணாவின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்று ஓர் புதிய இயக்கத்தை ஆரம்பித்தார்கள்.


32. பெண்மனம்...

"உன் சொந்த புத்திதான், உனக்கு வழிகாட்டி; அதை நல்ல முறையில் பயன்படுத்து. பிறரிடமுள்ள அவநம்பிக்கையைக் கைவிடு.

முன்னோர் சொல்லிப் போனது அற்புதமல்ல; அதிசயமுமல்ல, அதை அவர்களிடமே விட்டு விடு. அதில் நீ சம்பந்தப் படாமல் நீயே செய்ய, கண்டு பிடிக்க, முயற்சிசெய். அறிவுக்கே முதலிடம் கொடு.

தியாகம் என்பது சுயநலத்துக்கான, பயன் எதிர்பாராது, பொது நலத்துக்காகப் பாடுபடுவதும், எவ்விதமான அவமானங்களையும் லட்சியம் செய்யாமல், பல இன்னல்களுக்கும் தயாராகித் தொண்டாற்றுவது."

- தந்தை பெரியார்

மணியம்மையாரின் மனம் மிகவும் வேதனைக் குள்ளாகியது.

'நான் பெரியாரை மணந்து கொண்டது தவறா?'

என் திருமணத்தால் ஒன்றாய் இருந்த கழகத் தொண்டர்கள் ஏன் பிரிந்து செல்ல வேண்டும்? நானும் தொண்டு செய்யவே தானே வந்துள்ளேன்.

நான் இவர்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்!