பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

147


பெறாமலே எனக்கு இவ்வளவு பிள்ளைகளும்; உடன் பிறவாமலே; எனக்கு இவ்வளவு சகோதரர்களும் இருக்கிறார்கள் என்று எண்ணி மகிழ்ந்தேனே -

எல்லாம் கசப்பாய்... கனவாகிவிட்டதே என்று எண்ணி மணியம்மையார் மனம் வருந்தினார்.

ஆனால் பெரியாரோ -

ஒன்றுமே நடவாதது போல - எதைப்பற்றியும் கவலைப்படாமலும், கலங்காமலும் இருந்தார்.

அவரது எண்ணமெல்லாம்- தமிழ்நாட்டு இளைஞர்களைப் பற்றியும், அவர்களைப் பாதிக்கும் இந்தியைப் பற்றியுமே இருந்தது.

சுதந்திர இந்தியாவின் முதல் தமிழக முதல்வராக ஒமந்துார் இராமசாமியும்; முதல் கவர்னர் ஜெனரலாக இராஜாஜியும் பதவி வகித்து வந்தனர்.

அந்த சமயம் -

பம்பாயிலிருந்து பெரியாருக்கு அழைப்பு வந்தது. அங்கு நடந்த திராவிடர் கழக மகாநாட்டில் கலந்து கொண்டார்.

திராவிடர் கழகத்தின் இலட்சியத்தையும், அதன் முற்போக்குக் கொள்கைகளையும் பெரியார் விளக்கிப் பேசியபோது - அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

பெரியார் சென்னை வந்ததும், இந்தி எதிர்ப்பு மகாநாட்டில் கலந்து கொண்டார்.

மத்திய அரசு கட்டாயமாக இந்தியை ஆட்சி மொழியாக்க முயன்றது.