பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமரர் கே.பி.நீலமணி

149


காரணம் - தமிழர்களின் நலனுக்காகப் போராடியும், எதிர்த்தும் சீர்திருத்த வேண்டிய எண்ணற்ற பணிகள், அவர் கண் முன்னே குவிந்து கிடந்தன. அவற்றைப் பற்றியே பெரியார் சதா சிந்தித்துக் கொண்டிருப்பார்.

1950 ம் ஆண்டு பெரியார் எழுதிய 'பொன்மொழிகள்' என்னும் நூலை அரசு தடைசெய்து; பெரியாருக்கு ஆறுமாத சிறைத் தண்டனை விதித்தது.

தமிழ் மக்களது கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் வகுப்பு வாரி இட ஒதுக்கீட்டு முறை இருந்து வந்தது.

இந்த முறை அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.

அந்தத் தீர்ப்பை எதிர்த்துப் பெரியார் வன்மையாகப் போராடினார். அத்துடன் -

இரயில் நிலையங்களின் பெயர்ப்பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை நீக்க வேண்டும் என்று போராடினார்.

இந்தி எழுத்துக்களை தார் கொண்டு அழித்தனர்.

அதனால் -

இரயில் நிலையப் பெயர்ப் பலகைகளில் முதலில் ஆங்கிலமும், அடுத்து தமிழும், கடைசியாக இந்தியும் இடம் பெற்றது. அதே போல -

ஹோட்டல்களின் பெயர்ப் பலகைகளில் இருந்த குறிப்பிட்ட சாதிப் பெயரையும் நீக்க வேண்டுமென்று எதிர்ப்புத் தெரிவித்தார்.