பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

தந்தை பெரியார்


சாதிப் பெயர்கள் நீக்கப்பட்டது. பெரியாரின் எண்ணம் ஈடேறியது.

1952 ஆம் ஆண்டு, இந்தியாவெங்கும் முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில், பெரியார் காங்கிரஸ் - வேட்பாளராக நின்ற இராஜாஜியை - ஆதரிக்காமல், கம்யூனிஸ்ட்டுக்காரருக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துப் பிரசாரம் செய்தார். ஆனால், கம்யூனிஸ்ட் தோற்றது.

இராஜாஜி வெற்றி பெற்று, தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றார்.

தமது ஆட்சியில், இந்தியைக் கொண்டுவர முயற்சி செய்தார். பெரியார் உடனே அதை எதிர்த்தார்.

மாணவர்களுக்குக் குலக்கல்வித் திட்டத்தைக் கொணர்ந்தார். அதைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார்.

- பாதி நாள் பள்ளியிலும், பாதி நாள் வீட்டிலும் இருந்து; பள்ளிப் படிப்புடன், தங்கள் குலத் தொழிலையும், கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அத்திட்டம்.

இதற்கு மாணவர்களிடமிருந்தும், அனைத்துக் கட்சிகளிடமிருந்தும் பலத்த எதிர்ப்புக் கிளம்பிற்று.

அனைவரும், பெரியாரின் ஒத்துழைப்போடு அரசை தீவிரமாக எதிர்த்தனர்.

இதனால், இராஜாஜியின் மந்திரி சபை கவிழ்ந்தது. இராஜாஜி முதல் மந்திரிப் பதவியை இழந்தார் (குலக் கல்வித் திட்டம் கைவிடப் பட்டது).